மகளிர்மணி

கரோனா பணியில் பெண் மார்ஷல்கள்!

ரிஷி

கரோனா 2-ஆம் அலை இந்திய மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்திய மாநிலங்கள் அனைத்தும் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பெங்களூரு மாநகராட்சி அமைப்பான "புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே' (பிபிஎம்பி) கரோனா விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும் பராமரிப்பு மையங்களில் உதவுவதற்கும் சோதனை அடிப்படையில் நகரம் முழுவதும் 11 பெண் மார்ஷல்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா தொற்று ஆரம்பித்தபோதே முகக்கவசம் அணிந்துகொள்வது மற்றும் சமூக தூரத்தை கடைபிடிப்பது உள்ளிட்ட நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க 230- க்கும் மேற்பட்ட ஆண் மார்ஷல் வீரர்களை நகரின் முக்கிய வீதிகள், சந்தைகள் போன்ற பொது இடங்களில் பணி அமர்த்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது பெண் மார்ஷல்களை இறக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமை மார்ஷல் அதிகாரி கர்னல் ராஜ்பீர் சிங் கூறுகையில்,
"முதல் முறையாக 11 பெண் மார்ஷல்களை சோதனை அடிப்படையில் பணியமர்த்தியுள்ளோம். அவர்கள் ஆண் மார்ஷல்களைப் போன்று பயிற்சியைப் பெற்றவர்கள். இவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மகப்பேறு இல்லங்கள், கரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் நகர சோதனைகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கரோனா தொடர்பான பணிகளுக்கு பெண் மார்ஷல்கள் பணியில் அமர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இப்போது, பணி அமர்த்தப்பட்டுள்ள 11 பேரும், கரோனா விதிமுறைகளை வெற்றிகரமாக செயல்படுத்துகிறார்கள். இதனால், விதிமுறைகளை மீறும் நபர்களிடமிருந்து அபராதம் வசூலிப்பதற்கும், கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெண் மார்ஷல்களை ஈடுபடுத்த பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது'' என்றார்.

பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டு, மகாதேவபுராவில் உள்ள கரோனா மையத்தில் நிறுத்தப்பட்டடுள்ள பெண் மார்ஷலான பவானி கே.ஜி இது குறித்து கூறுகையில், ""நான் எப்போதும் மக்களுக்கு சேவை செய்யும் பணியையே விரும்புவதால் இந்த வேலைக்கு விண்ணப்பித்தேன். எனது கல்லூரி நாட்களில் என்.சி.சி.யில் இருந்தேன். "சேவைதான் எங்கள் குறிக்கோள்' என்று எங்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணியளவில் என் பணியைத் தொடங்கி, மதியம் 3 மணி வரை வேலை செய்கிறேன். இந்த துன்பகரமான காலத்தில் மக்களுக்கு உதவ வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன்'' என்றார்.

இவர், கரோனா பராமரிப்பு மையத்தில், நோயாளிகளின் விவரங்களைச் சேகரித்து, அவர்களின் அறிகுறிகளைச் சரிபார்த்து, அவர்களுக்கு சரியான ஆலோசனை மற்றும் ஆறுதல் அளித்து அவர்களுக்கு தேவையான உதவியை செய்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பவானியை போலவே வில்சன் கார்டன் கரோனா பராமரிப்பு மையத்தில் பணிபுரிபவர் மற்றொரு மார்ஷலான ஜோதி. இவர் தனது கடமையைச் செய்வதற்காக தினமும் சிக்பேட்டிலிருந்து 10 கிலோமீட்டர் பயணம் செய்து வில்சன் கார்டன் கரோனா பராமரிப்பு மையத்துக்கு வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ""பெங்களூருவில் பெண் மார்ஷல்களின் முதல் தொகுப்பில் நானும் ஒருத்தியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். மக்களை கையாள்வதற்கும் அவர்களுக்கு கரோனா பராமரிப்பு மையத்தில் உதவுவதற்கும் பெங்களூரு மாநகராட்சியிடம் இருந்து முறையான பயிற்சி பெற்றுள்ளோம்," என்று கூறியிருக்கிறார் மார்ஷல் ஜோதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT