மகளிர்மணி

தாலாட்டுப் பாடி சிங்கத்தை தூங்கவைக்கும் பெண்!

28th Jul 2021 06:00 AM

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆர்லாஷ்மி என்ற பெண் கர்ஜிக்கும் சிங்கத்தை மடியில் படுக்கப் போட்டுத் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கிறார். அவைகளோடு கொஞ்சி விளையாடுகிறார்.

வன விலங்குகள் பூங்கா ஒன்றில் வசிக்கும் அதிபயங்கர விலங்குகளுக்குப் பராமரிப்பாளராக இருக்கும் ஆர்லாஷ்மியிடம் இதைப் பற்றிக் கேட்டால், "" அவைகளும் அன்பான விலங்குகள்தான். நாம் மரியாதையோடும், உண்மையான அன்போடும் பழகினால் அவைகள் நம்மீது பல மடங்கு பிரியத்தைக் காட்டும். பார்த்ததும் அஞ்சும் அளவுக்கு மனிதர்களை போல அவை மோசமானவை அல்ல'' என்கிறார் ஆர்லாஷ்மி?

தன் வீட்டிலேயே நாய், சிங்கம், புலி ஆகியவற்றை ஒன்றாக வைத்துப் பராமரித்து வருகிறார். அவைகளும் ஒன்றுக்கொன்று நண்பர்களைப் போலப் பழகிவருகின்றன. மெத்தையில் ஏறி ஆர்லாஷ்மியோடு விளையாடிவிட்டுக் கட்டிப் பிடித்தபடியே உறங்குகின்றன. காலையில் எழுந்ததும் "குட்மார்னிங்' சொல்வது போல் காலைத் தூக்குகின்றன.

Tags : magaliarmani lion sleep by singing
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT