மகளிர்மணி

கதைகள் சொல்லும் ஓவியம்!

20th Jan 2021 05:46 PM | -எம்.மாரியப்பன்

ADVERTISEMENT

 

சிறு வயதில் தூரிகை பிடிக்கத் துணிந்த கை இன்றளவும் தொடர்கிறது. கதைகளை ஓவியமாக்கி, பார்ப்போரின் கண்களுக்கு அவற்றை காவியமாக்கி வருகிறார் நாமக்கல், மோகனூர் சாலை, சுவாமி நகர் பகுதியைச் சேர்ந்த திவ்யா சந்தோஷ் (29). ஃபேஷன் டெக்னாலஜி துறை சார்ந்த படிப்புகளை மேற்கொண்ட  அவர் சுயமாகத் தொழில் புரிந்தாலும், ஓவியம் மீதான நாட்டத்தை விடாமல் தொடர்கிறார். நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் தனது படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்த அவரைச் சந்தித்தபோது: 

""ஓவிய ஆர்வம் எனக்கு சிறு வயது முதலே உண்டு. எனது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட தந்தை பன்னீர்செல்வம், அதற்கான பயிற்சியாளர்களிடம் சேர்த்து விட்டார். மாவட்ட அளவில், பள்ளிகள் அளவில் நடைபெறும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்று வந்தாலும், பிளஸ் 2 படிக்கும்போது தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பங்கேற்று "ஓவியச் சுடர்' விருது பெற்றது முக்கியமான திருப்புமுனை.

அதன்பின்னர் சென்னையில் தங்கியிருந்து ஃபேஷன் டிசைனிங் துறை சார்ந்த டிஎஃப்ஏ, பி.டிஇஎஸ். (என்ஐஎஃப்டி) கல்வியை ஐந்து ஆண்டுகள் படித்தேன். தற்போது     ஃபேஷன் டிசைனில் உள்ள உத்திகளைக் கொண்டு பெண்கள் அணியும் வளையல்கள், ரவிக்கைகளை நவீன முறையில் வடிவமைத்துக் கொடுக்கிறேன். ஆயில் பெயிண்டிங், பென் பெயிண்டிங், 
அக்ரிலிக் பெயிண்டிங், கோலமாவு பெயிண்டிங், தஞ்சாவூர் பெயிண்டிங் போன்றவற்றையும் மேற்கொள்கிறேன். எனது பயிற்சியாளர் சிவகுமார் கதைகளை ஓவியமாகத் தீட்டுவதற்கான பிரத்யேகப் பயிற்சியை அளித்தார். மற்ற ஓவியங்களை காட்டிலும் இவ்வாறான ஓவியங்கள் வரைவது சவாலானது. அந்த வகையில், 
கீழ்த்தட்டு மக்கள் பற்றிய கதையை ஓவியமாகத் தீட்டியுள்ளேன்.  
கிராமத் திருவிழாக்கள், நாமக்கல்லின் பெருமைகள் போன்றவற்றையும் ஓவியமாகத் தீட்டியுள்ளேன்.  கண்காட்சியில் இடம்பெற்ற 
ஓவியங்களைப் பார்வையிட்டு தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை ஆணையர் வ.கலையரசி, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் 
ஆகியோர் பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.

மாநில அளவிலும், தேசிய அளவிலும் முதலிடம் பெறும் வகை
யிலான ஓவியத்தைத் தீட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒவ்வொரு நாளும் தூரிகையைப் பிடிக்கிறேன்'' என்றார்.

பொது முடக்கம் தந்த வாய்ப்பு: நாமக்கல், சந்தைப்பேட்டை புதூரைச் சேர்ந்தவர் வ.த.நந்தனா (25). பி.டெக். முடித்த இவர் பெங்களூரில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். கரோனா பொது முடக்கத்தால் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வீடு திரும்பிய அவர், பொழுதுபோக்காகத் தொடங்கிய ஓவியப் பயிற்சி 
தற்போது சாதனையாளராக அவரை தலைநிமிர வைத்துள்ளது. 

தனது தோழியான திவ்யா சந்தோஷ் மூலம் பயிற்சியாளர் சிவகுமாரிடம் ஓவியத்தைக் கற்றார். கடந்த எட்டு மாதத்தில் தோழிக்கு நிகராக 
அவரும் சாதனை ஓவியங்களைத் தீட்டி வருகிறார். நாமக்கல் ஓவியக் கண்காட்சியில் தோழிகள் இருவரின் ஓவியத்தை பலரும் வியந்து ரசித்தனர். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT