மகளிர்மணி

சின்னத்திரை  மின்னல்கள்!: மீராவாகவே என்னைப் பார்க்கிறார்கள்!

ஸ்ரீ


சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் "கண்ணான கண்ணே' தொடரின் நாயகியாக சாந்தமும், அமைதியும் கூடி கொண்ட மீராவாக வந்து ரசிகர்களின் மனதில் ஓட்டிக் கொண்டவர் நிமிஷ்கா ராதாகிருஷ்ணன். இவரது தனது அனுபவம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

சின்னத்திரை பிரவேசம் குறித்து?

எனக்கு பூர்வீகம் கேரளா. ஆனால், பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயம்புத்தூரில்தான். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் ஃபேஷன் டிசைனிங் படித்துக் கொண்டிருக்கும்போது, தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாய்ப்புக் கிடைத்தது. இதனால், சின்னத்திரையில் முதலில் தொகுப்பாளராகத்தான் அறிமுகம் ஆனேன்.

அதன் மூலம் மலையாள சேனல் ஒன்றில் தொடரின் நாயகியாகும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் தொடரின் மூலம்தான் "கண்ணான கண்ணே' தொடரின் வாய்ப்பு கிடைத்தது. இதுதான் தமிழில் என் பிரவேசம் நிகழ்ந்த கதை.

"கண்ணான கண்ணே' தொடர் குறித்து?

அப்பாவுக்கும், மகளுக்கும் இடையே உள்ள பாசப்போராட்டம்தான் கதை என்றார்கள். உடனே ஒத்துக் கொண்டேன். காரணம் நான் வீட்டில் அப்பாவோட செல்லம்.

"கண்ணான கண்ணே' தொடர் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தொகுப்பாளராக இருந்த போதும் சரி, மலையாளத் தொடரில் நடித்த போதும் சரி, மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய அறிமுகம் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது மக்கள் என்னை மீராவாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். மேலும் சுலக்ஷனா அம்மா, பிரித்வி ராஜ் சார், நித்தியா தாஸ் இப்படி இன்னும் பெரிய பெரிய ஆர்டிஸ்ட்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைக்கும் போது நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று தோன்றுகிறது. அவர்களிடம் இருந்து தினம் தினம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். இப்படியொரு வாய்ப்பளித்த தொடரின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ரோல்மாடல்?

பிரியங்கா சோப்ராதான் என்னுடைய ரோல் மாடல். அவங்க என்ன படம் நடிச்சாலும் அதில் தன்னுடைய பெஸ்ட் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர். அவரைப் போலவே எனக்கும் நாம என்ன வேலை செய்தாலும் அதில் பெஸ்ட் தர வேண்டும் என்று நினைக்கிறேன் அது சின்னத்திரையோ அல்லது பெரியதிரையோ. அதுபோன்று இயக்குநர் கவுதம் மேனன் சார் ரொம்ப பிடிக்கும். அவருடைய படத்தில் ஒருமுறையாவது நடிக்க வேண்டும் என்பது ஆசை.

சோஷியல் மீடியாக்கள் குறித்து என்ன நினைக்கிறீங்க?

நான் எப்போதும் சோஷியல் மீடியாக்களில் இயங்குபவள் அல்ல. பொதுவாகவே, எப்போதும் போனும் கையுமாக இருப்பவர்களை பார்க்கும் போது, அதிலேயே மூழ்கி நேரத்தை வீணடிக்கிறார்களே என்று கவலையாக இருக்கும்.

காரணம், நிறையப்பேர் தேவையானதை விட்டுவிட்டு தேவையில்லாததைதான் போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லாமல், நம்மை சுற்றி இருக்கும் உலகத்துடன் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொள்வதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். இந்த விஷயங்களைதான் கரோனா நமக்கு இன்னும் ஆழமாக கற்றுக் கொடுத்திருக்கிறது. இதை சோஷியல் மீடியாவில் எந்நேரத்தை செலவிடுபவர்கள்கட்டாயம் உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT