மகளிர்மணி

ஒருபக்கக் கட்டுரைகள்!

2nd Dec 2021 06:54 PM

ADVERTISEMENT


சி ன்னஞ்சிறு வயதிலேயே இருதயம் பலவீனமாக இருக்கிறது என்று வெளியில் போகவிடாமல் பெற்றோர் வீட்டுக்குள் அடைத்து வைத்தார்கள். 9 வயது சிறுமியாக வீட்டுக்குள் அடைபட்டுக்குக் கிடந்தபோதே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய அந்தச் சிறுமிதான் காலப்போக்கில் 24 நூல்களையும், 15 நாவல்களையும் எழுதிக் குவித்தார் அவர் பெயர் நதீன் கோர்டிமர்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நதீன் கோர்டிமரின் ஒருபக்கக் கட்டுரைகள், அவர் வாழ்ந்த தேசத்தில் பூகம்பத்தை உண்டாக்கியது. இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற இவர், கருப்பின மக்களின் அவலங்களை ஒரு பக்கக் கட்டுரைகளாகத் தீட்டினார். அக்கட்டுரைகளின் சாராம்சம் தென்னாப்பிரிக்க தேசத்தையே உலுக்கியது.

இந்தச் சமூகம்தானே என்னை வளர்த்தது. அந்தச் சமூகத்திற்காக நான் என்னை அர்ப்பணிக்கவும் தயார் என்று அவர் எழுதிய எழுத்துக்கள் பல பரிசுகளையும், பட்டங்களையும் அவருக்குப் பெற்றுத்தந்தன. இவரது எழுத்துக்காகக் கிடைத்த நோபல் பரிசுத் தொகையை கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காகவே செலவிட்டார் நதீன் கோர்டிமர்.

ஆற்காடு அன்பழகன் எழுதிய "மகளிர் மணி மகுடம்; நூலிலிருந்து.

ADVERTISEMENT

Tags : magaliarmani One page articles!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT