மகளிர்மணி

கோதுமை சமோசா 

21st Apr 2021 06:00 AM | - ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

ADVERTISEMENT


தேவையானவை:

கோதுமை மாவு - 250 கிராம்
முட்டைகோஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
புதினா - 1கட்டு
பச்சைமிளகாய் - 5
பட்டை - 1
லவங்கம் - 1
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

புதினா, பச்சைமிளகாயை மையாக அரைக்க வேண்டும். உருளைக்கிழங்கு, கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

கோதுமை மாவுடன் உப்பு, புதினா விழுது, கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசைந்து அரைமணி நேரம் ஊறவிட்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக இட வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளித்து வேக வைத்து காய்கறி போட்டு வதக்கி மேலே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொஞ்சமாக நீர்விட்டு பச்சை வாசனைப் போக வதக்கி கெட்டியானதும் கீழே இறக்க வேண்டும்.

சாப்பாத்தியின் நடுவில் ஒரு கரண்டி மசாலாவை வைத்து சப்பாத்தியின் இருமுனைகளையும் ஒட்டி விட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து இந்த சமோசாவைப் போட்டுப் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

Tags : கோதுமை சமோசா 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT