மகளிர்மணி

கோதுமை  கட்லெட் 

21st Apr 2021 06:00 AM | - ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

ADVERTISEMENT


தேவையானவை:

கோதுமை மாவு - 100 கிராம்
பொட்டுக்கடலைமாவு - 1 கரண்டி
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பட்டாணி - 1பாக்கெட்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 5
ரொட்டித் துண்டு - 4
கேரட் - 50 கிராம்
கரம் மசாலாப் பொடி - 1 கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட் ஆகியவற்றை நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

பின்னர், கோதுமை மாவு, பொட்டுக்கடலை மாவு, ரொட்டி துண்டு, மசாலா வகைகள், உப்பு உள்ளிட்ட மற்ற பொருள்கள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய்விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி, அதை தோசைகல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் சிறிது எண்ணெய்த் தடவி வேக வைத்து எடுக்க வேண்டும்.

Tags : கோதுமை  கட்லெட் 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT