மகளிர்மணி

புது வீடு !

DIN


தள்ளாத வயதிலும் அடுப்பு தணலில் வெந்து, ஆவி பறக்க  இட்லி சுட்டு,  ஒரு ரூபாய்க்கு  விற்று  உலகளவில் புகழ்  பெற்றவர்  கமலாத்தாள் பாட்டி.

கோவை ஆலந்தூரை அடுத்த வடிவேலம்பாளையம் பகுதியில் வசித்து வரும் 85 வயது மூதாட்டியான இவர், தினந்தோறும் அதிகாலை 4 மணியளவில் எழுந்து தனது வீட்டு வேலைகளை முடித்து விட்டு, பின்னர் இட்லி கடையை தொடங்கி விடுகிறார்.

கடந்த 30 -ஆண்டுகளாக,  யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஆளாக, தனது கையாலே இட்லி மாவு தயாரித்தும், ஆட்டுக்கல்லில்  சட்னி அரைத்து, சாம்பார் செய்து விற்பதால்,  இவரது இட்லிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் நிரந்தர வாடிக்கையாளர்களாக மாறி விட்டனர். படிப்படியாக இவரது இட்லியின் சுவை பலரது நாவில் தொற்றிக்கொள்ள, ஊர் தாண்டி பாட்டியின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவத்தொடங்கியது.

கரோனா ஊரடங்கு காலத்திலும் , பாட்டி தனது சேவையை நிறுத்தவில்லை. இவரின் சேவை வெளியுலகத்துக்குத் தெரியவர, பலரும் உதவிபுரிய முன்வந்தார்கள். 

மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா,  கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு ஆகியவற்றை வழங்கினார்.  அதனைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பில் இருந்து கமலாத்தாள் பாட்டிக்கு உதவிகள் குவியத் தொடங்கின.

இந்நிலையில், தற்போது வீடு கட்டி கொடுக்க முன் வந்துள்ளார், ஆனந்த் மகேந்திரா. இதற்காக பாட்டியின் பெயரில் நிலம் வாங்கி பத்திரப்பதிவும் முடிந்து,  வசிக்க வீடும் அதனை ஒட்டிய  கடையுமாக கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக  நடைப்பெற்று வருகின்றன. விரைவில் வீட்டின் பணி நிறைவடைய உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT