மகளிர்மணி

கொள்ளு  பனீர் மசாலா 

7th Apr 2021 06:00 AM |  - ராதிகா அழகப்பன்

ADVERTISEMENT

 

தேவையானவை:

கொள்ளு பருப்பு - 150 கிராம்
பனீர் - 50 கிராம்
காப்சிகம் - 1
தக்காளி - 2
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டுவிழுது - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
கொத்துமல்லி - கொஞ்சம்

செய்முறை:

ADVERTISEMENT

தக்காளி, காப்சிகம், வெங்காயம் இவைகளை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பனீரை சிறுதுண்டுகளாக நறுக்கி வைக்கவும். கொள்ளு பருப்புடன் போதிய அளவு நீர் சேர்த்து வேகவிடவும். பாதிபதம் வெந்ததும், நறுக்கிய தக்காளி, காப்சிகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பனீர், தனியாத்தூள், கரம் மசாலா தூள் இவைகளைச் சேர்த்து உப்பிட்டு நன்கு கலந்து தொடர்ந்து வேகவிடவும். தண்ணீர் முழுதும் நன்கு வற்றி, மசாலா வகைகள் நன்கு சுருண்டு கமகம என வாசனை வந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். இதில் கொத்துமல்லி கீரையை மேலாகத் தூவிக் கொள்ளவும். கொள்ளு பனீர் மசாலா தயார்.

Tags : கொள்ளு  பனீர் மசாலா 
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT