மகளிர்மணி

கொள்ளு  பாயசம் 

ராதிகா அழகப்பன்

தேவையானவை:

கொள்ளு பருப்பு - கால் கிலோ
வெல்லம் - 400 கிராம்
தேங்காய்ப்பால் - அரை தம்ளர்
முந்திரி பருப்பு - 8
உலர் திராட்சை - 2 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - 2 சிட்டிகை
நெய் - 25 கிராம்

செய்முறை:

முந்திரி பருப்பை சிறிய துண்டுகளாக ஒடித்து, உலர்திராட்சையும் சேர்த்து சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அடிகனமுள்ள ஒரு பாத்திரத்தில் கொள்ளு பருப்பை இட்டு, போதிய அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். அரைப்பதம் வெந்ததும், வெல்லத்தைப் பொடித்திட்டு தொடர்ந்து வேகவிடவும். முக்கால்பதம் வெந்ததும், தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு கிளறி கொடுக்கவும். இடை இடையே நெய்யை ஊற்றி கிளறி விடவும். கலவை பாயச பதம் வந்ததும் வறுத்த முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். கொள்ளு பாயசம் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT