மகளிர்மணி

உயிரைக் காத்தது யார்?

டி.எம். இரத்தினவேல்


அது ஒரு பயங்கரமான குளிர்காலம். காரிருளும் கடும்பனியும் கைகோர்த்துக் கொண்டு பயமுறுத்தும் ஒரு நாள் இரவு.
இருளையும் பனியையும் கிழித்துக் கொண்டு அந்த எக்ஸ்பிரஸ் ரயில் லண்டன் மாநகர் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
அதன் பெட்டிகளில் ஒன்றில் பிரிட்டிஷ் பேரரசி விக்டோரியா மகாராணியார் பயணம் செய்கிறார். இரவுச் சாப்பாடு முடிந்துவிட்டது. நள்ளிரவுப் பிரார்த்தனையும் ஆகிவிட்டது. படுக்கப் போக வேண்டியதுதான் பாக்கி.
திடீரென்று ரயில், கீறிச்சென்று பயங்கரமாகக் கத்திக் கொண்டே வேகம் குறைந்து, சில விநாடிகளில் அத்துவானக் காட்டில் சடக் என்று நின்றுவிட்டது.
மகாராணியுடன் பயணித்த உதவியாளர்கள் வண்டியிலிருந்து குதித்து என்ஜினை நோக்கி வேகமாக ஓடினார்கள். "என்ன நடந்தது? ஏன் வண்டியை நிறுத்தினீர்கள்' என்று பரபரப்புடன் டிரைவரிடம் கேட்டார்கள்.
"ஏதோ ஓர் உருவம் பெரிதாக இரண்டு கைகளையும் விரித்து ஆட்டி ரயிலை நிறுத்தச்சொல்லிற்று இப்போது பார்த்தால் யாரையுமே காணோம்' என்று வியப்பு மேலிடக் கூறினார் டிரைவர். அந்தக் கடுங்குளிரிலும் அச்சத்தால் அவருக்கு வியர்த்திருந்தது.
ரயில் என்ஜினின் முகப்பு வெளிச்சத்தில், மகாராணியாரின் பாதுகாவலர்களும், அதிகாரிகளும் ரயில் வண்டியை நிறுத்தச் சொன்னவரைத் தேடிக் கொண்டு முன்னால் போனார்கள்.
போனவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இருநூறு கஜ தூரத்தில் ஒரு சிறியளவில் ரயில் பாலம் உடைந்து கிடந்தது. கீழே ஒரு சிறிய நதி.
மகாராணிக்கும் ரயிலில் வந்த பயணிகளுக்கும் எப்பேர்ப்பட்ட ஆபத்து வர இருந்தது என்று அறிந்து எல்லோரும் திடுக்கிட்டுப் போனார்கள். அச்சவுணர்வுடன் பலர் அழுதே விட்டார்கள்.
பாலத்தைச் செப்பனிடும் வேலை உடனே ஆரம்பமாயிற்று. பொழுது விடிந்து வெகு நேரமாகிவிட்டது. பணிமுடியும் வரை அந்த ரயில் அங்கேயே நின்றிருந்தது. எங்கும் பனிமேகம் சூழ்ந்திருந்ததால் எதையும் காண்பது அரிதாக இருந்தது.
ரயில் மீண்டும் புறப்படுவதற்கு முன், "ரயிலை நிறுத்தி என் உயிரைக் காப்பாற்றிய அந்த மனிதரை எப்படியாவது தேடிக் கண்டு
பிடித்து அழைத்து வாருங்கள் அவருக்கு நான் நேரில் நன்றி சொல்ல விரும்புகிறேன்' என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தார் விக்டோரியா மகாராணி.
ஆனால், ரயில் சிப்பந்திகள் எவ்வளவு தேடியும் அந்த ஆபத்பாந்தவனைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. பாலம் செப்பனிடப்பட்டு ரயில் கிளம்பியது.
ரயில் லண்டனை அடைந்ததும், பயணிகள் எல்லோரும் இறங்கிப்போன பிறகு என்ஜின் டிரைவர், வழக்கம் போல் என்ஜினை செக்அப் செய்யப் போனார்.
அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. என்ஜினின் முகப்பு விளக்கு கண்ணாடி மீது ஃபால்கன் கழுகு போன்ற ஒரு பெரிய பறவை நீண்ட இறக்கைகளை விரித்த நிலையில் ஆடிக் கொண்டு, இறந்து கிடந்தது.
அதன் விரித்த இறகுகளின் நிழல்தான், பனியில் மனிதனின் கைபோல இருந்திருக்கிறது. உடைந்த பாலத்தை நெருங்கும் தருவாயில்தான் அது பறந்து வந்து விழுந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் அதன் சிறகுகள் கடைசிமுறையாக அடித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் யாரோ இரு கைகளையும் ஆட்டி ரயில் வண்டியை நிறுத்தச் சொல்வதுபோல் இருந்திருக்கிறது.
விக்டோரியா மகாராணியின் உயிரைக் காத்த அந்தப் பறவையின் உடலை அபூர்வப் பொருளைப் போல் இன்றும் லண்டன் மியூசியத்தில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT