மகளிர்மணி

ஈரப் பலாக்காய்

23rd Sep 2020 06:00 AM | - ராஜிராதா

ADVERTISEMENT

 


தென்னிந்தியா மற்றும் இலங்கையில் நிறைய காணப்படுவது இந்த ஈரப்பலாக்காய் (Bread fruit) . இதில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்டுக்கான சத்துகள் காணப்படுகிறது.
இதிலுள்ள ஒமேகா 3+6 , இருதய ஆரோக்கியத்துக்கும், மூளை மற்றும் மன வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும் தோல் மற்றும் தலை ரோமத்திற்கு மிகவும் நல்லது. மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.
இதனை கறி அல்லது குழம்பு செய்து சாப்பிட்டால் அழற்சி வீக்கங்கள் இருந்தாலும் கரைத்துவிடும். இந்த அயற்சி வீக்கம் தான் பல வியாதிகளுக்கு அடிப்படை.. ஆக அதனை நீக்குவதால் பெரும்பாலும் நோய்கள் நம்மை அண்டாமல் நிம்மதியாக இருக்கலாம்.
உடலில் தற்காப்பு வலிமையை கூட்டும் இதில் உள்ள அமினோ அமிலங்கள், உடலுக்கு தேவையான செல்களை உற்பத்தி செய்து, உடலின் அனைத்து பாகங்களும் சிறப்பாக செயல்பட உதவும். இதனால்தான் இந்த ஈரப் பலாக்காயை, பில்டிங் பிளாக் ( கட்டடக் கல்) என அழைப்பர். உடலுக்கே உரமாக காக்கும்.
நமது உடலுக்கு, நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வைட்டமின் சி தேவையோ, அத்தனையும் இதில் உள்ளது.
மேலும் இரும்பு, மக்னீசியம், கேல்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ப்ரோட்டின்,தையமின், விட்டமின் ஏ என எல்லாம் இதில் உள்ளன. இதனால் இதனை முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் உடலையே வலிமையுடன் பராமரிக்க முடியும்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT