மகளிர்மணி

கிச்சன் டிப்ஸ்...

23rd Sep 2020 06:00 AM |  - மல்லிகா  அன்பழகன்,  சென்னை. 

ADVERTISEMENT

 

பீட்ரூட்டை வெயிலில் நன்றாக காய வைத்து, பின் மிக்ஸியில் அரைத்து பவுடராக்கி வைத்துக் கொண்டால், ஸ்வீட்டில் கலர் பவுடராக கலக்கலாம்.

*உணவு பாத்திரங்களின் அடியில் சிறிது விளக்கெண்ணெய் தடவி வைத்தால் எறும்புகள் கிட்ட வராது.
 

*காய்ந்த கறிவேப்பிலையை தூக்கி யெறியாமல், இட்லி வேக வைக்கும் முன்பு, இட்லிச் சட்டியில் உள்ள தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டால் இட்லி மணமாக இருக்கும்.

*உருளைக்கிழங்கை ஐஸ்வாட்டரில் கொஞ்ச நேரம் போட்டு வைத்து பிறகு வறுத்தால் மொறு மொறுப்பாக இருக்கும். அதுபோல், உருளைக் கிழங்கை வேக வைக்கும் போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் கிழங்கு வெடிக்காமல் இருக்கும்.

ADVERTISEMENT

*ஓவனில் அசைவம் சமைத்தால் அதன் வாசனை போகாது. இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு துளிகள் வெண்ணிலா அல்லது ரோஸ் எசென்ஸ் விட்டு ஓவனில் இளம் சூட்டில் வைத்து, சிறிது நேரம் கழித்து சுவிட்ச் ஆப் செய்தால் வாடை போகும்.

*கேக் தயாரிக்கும் போது பிஸ்கட், பிஸ்தாவை அப்படியே கேக்கின் மீது பதிக்காமல், பாலில் நனைத்து தூவினால் உதிராமல் கேக் மீது ஓட்டிக் கொள்ளும்.

*வெண்டைக்காய் சமைக்கும்போது, சிறிது தயிர் சேர்த்து வதக்கினால் சுவையாகவும், வழவழப்பு இல்லாமலும் இருக்கும்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT