மகளிர்மணி

சமையல் சமையல்

16th Sep 2020 12:00 AM | - லோ.சித்ரா

ADVERTISEMENT

 

வெஜிடபிள் க்ரீம் கிரேவி

தேவையானவை:

கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு,
பச்சைப்பட்டாணி (நறுக்கியது) - 2 கிண்ணம்
காய்ச்சியப்பால் - 1 கிண்ணம்
பிரஷ் க்ரீம் - அரை கிண்ணம்
மைதா - 2 மேசைக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
வெண்ணெய் - எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

ADVERTISEMENT

செய்முறை: நறுக்கிய காய்கறிகளை வேக வைத்து கொள்ளவும். வாணலியில் வெண்ணெய்ச் சேர்த்து உருகியவுடன், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். முக்கால் பாகம் வதங்கியதும் வேக வைத்த காய்கறிகள், மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து புரட்டி வதக்கவும். ஒரு பாத்திரத்தில் காய்ச்சியப் பாலை ஊற்றி சிறிது சுண்டக் காய வைத்து, மைதா கரைசல், பிரஷ் க்ரீம் சேர்த்துக் கிளறி 1 நிமிடம் கழித்து காய்கறி கலவையில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி, சப்பாத்தி, நாண், பரோட்டா, பூரி வகைகளுடன் சேர்த்து பரிமாறவும்.


பனீர், பீட்ரூட் கிரேவி

தேவையானவை:
பனீர் துருவல் - அரை கிண்ணம்
பீட்ரூட் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
புதினா - கால் கிண்ணம்
கொத்துமல்லித் தழை - கால் கிண்ணம்
எண்ணெய் - தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் - 1
கரம் மசாலா - அரை மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - அரைத் தேக்கரண்டி

செய்முறை: பனீரை சன்னமாக துருவிக்கொள்ளவும். தக்காளி, புதினா, கொத்துமல்லி, வெங்காயம் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீட்ரூட்டை துருவி வேக வைத்துக் கொள்ளவும். பின்னர், புதினா, கொத்துமல்லித் தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன், கடுகு போட்டு வெடித்தவுடன், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வேக வைத்த பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும். பின்னர், கரம் மசாலா, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, பின்னர் தக்காளி சேர்த்து வதக்கியபிறகு அதனுடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். தேவையானால் தண்ணீர் கால் டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து 1 நிமிடம் கழித்து, துருவிய பனீரைச் சேர்த்து கலந்துவிடவும். 2 நிமிடம் கழித்து இறக்கிவிடவும். சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறவும்.


உருளைக்கிழங்கு ரிச் கிரேவி

தேவையானவை:
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 2
வெண்ணெய் - சிறிய எலுமிச்சை அளவு
முந்திரிபருப்பு - 20
தக்காளி - 4
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
கரம் மசாலா - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
கல் உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி எண்ணெய்யில் சாஃப்ட்டாகும் வரை பொரித்துக் கொள்ளவும். ஒரு சிறிய வாணலியில் வெண்ணெய்ச் சேர்த்து உருகியவுடன், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, ஒரு தட்டில் கொட்டி சற்றே ஆறியவுடன், மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தவுடன், சீரகம், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கவும். பின்னர், வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும், முந்திரி விழுதையும் சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி அரைத்ததை ஊற்றி கொதிக்க விடவும். பின்னர், மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலா சேர்க்கவும். கிரேவி கெட்டியாக இருந்தால் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மேலும் ஒரு கொதி வந்தவுடன், பொரித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து கொத்துமல்லித் தழை தூவி கிளறி ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சப்பாத்தி, நாண், பிரைட் ரைஸ் போன்றவற்றிற்கு பரிமாற சுவையாக இருக்கும்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT