மகளிர்மணி

அதிகம் டீ குடிப்பவரா நீங்கள் ...

16th Sep 2020 12:00 AM | - ஜோ.ஜெயக்குமார் 

ADVERTISEMENT


காலையில் எழுந்ததும் டீ குடித்தால்தான் சிலருக்கு அன்றைய நாளே சிறப்பாக இருக்கும் என்று உணர்பவர்களும் உண்டு. ஆனால், அதிகமாகத் தேநீர்(டீ ) குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் சிலருக்கு தெரியவில்லை. நாளொன்றுக்கு மூன்றாவது கோப்பைக்கு மேல் டீ குடித்தால் ஐந்து பக்க விளைவுகள் ஏற்படும்  அபாயம்  உண்டு.  அவை  என்னவென்று பார்ப்போம்:

தூக்கமின்மை

தேநீரில் உள்ள காஃபின் (Caffeine) அதிகமாக எடுத்துக் கொண்டால் லேசான டையூரிடிக் விளைவுக்கு வழிவகுக்கின்றது. இது தூக்கமின்மையை  ஏற்படுத்திவிடும்.

மலச்சிக்கல்

ADVERTISEMENT

தேநீரில் தியோபிலின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அதிக அளவில் தேநீர் அருந்தும்போது அது செரிமானத்தின் போது நீரிழப்பை ஏற்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

கருச்சிதைவுக்கு சாத்தியம்

கர்ப்பிணி பெண்கள் தேநீரை முழுவதுமாக தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதன் காஃபின் உள்ளடக்கம் கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கருச்சிதைவு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும்.

கவலை மற்றும் அமைதியின்மை

Caffeine மனநிலையை மேம்படுத்த அதிகரிக்கும் மருந்துகளில் ஒன்றாகும், மேலும் இது நம் உடலில் சில நல்ல மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தேநீர் அதிகமாக உட்கொள்வதால்  அமைதியின்மை, பதட்டம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிக்கின்றது. மேலும் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT