மகளிர்மணி

தபேலா பயிற்சி பெறும் ஜப்பானியப் பெண்!

அ. குமார்


2012-ஆம் ஆண்டு இந்திய கிளாசிக்கல் இசையைக் கற்றுக் கொள்வதற்காக இந்தியாவுக்கு வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நோரிகோ சக்தி, கொல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி யூனிவர்சிடியில் சேர்ந்தார். இந்திய கலாசாரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட நோரிகோ, டோக்கியோவில் இருந்தபோது நடன இசை, டிரம், பேஸ், ஹிப்- ஹாப், ரெகி போன்ற நடனங்களில் தேர்ச்சி பெற்றிருந்ததோடு நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார். கூடவே உலக நாடுகளில் உள்ள கிராமிய இசை மற்றும் வாத்தியங்களைக் கற்கவும் ஆர்வம் கொண்டிருந்தார். இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை:

""இசை என்பது ஒவ்வொருவருடைய ரத்தத்திலும் கலந்ததாகும். இசைக் கலைஞர் என்ற முறையில் என் விருப்பப்படி ஏதாவது ஓர் இந்திய வாத்தியத்தைக் கற்க விரும்பியபோது, தபேலா பயிற்சிப் பெற முடிவு செய்தேன். இந்த பொது முடக்கத்தில் நாம் எங்கு இருக்கிறோம்? என்ன செய்கிறோம்? என்பது முக்கியமல்ல.

2020-ஆம் ஆண்டு மக்களை மட்டுமின்றி இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் அனைவரையுமே அவர்கள் திறமை களை வெளிப்படுத்த முடியாமல் முடக்கியுள்ளது. ஏறக்குறைய இது மக்களுக்கு எதிரான ஒரு யுத்தம்தான். இருப்பினும் இதை எதிர்கொள்ள வேண்டுமென்பதற்காக "வித் இன் - தி டைம் அண்ட் பிளேஸ்' என்ற தலைப்பில் இசை ஆல்பமொன்றைத் தயாரித்துள்ளேன்.

கடந்த காலச் சம்பவங்களையும், வேர்களையும் நினைவுப்படுத்த "தோஸ்டேஸ்' என்ற தலைப்பிலும், கேட்பவர்களின் மனநிலையை வெளிப்படுத்த "சம்மர் ரெமினிசிஸ்' என்றொரு பாடலையும், இந்திய - ஜப்பானியக் கலாசாரத்தை கௌரவிப்பதற்காக "டென்செல் தால் ரீஇன்கார்னேஷன்' என்ற தலைப்பிலும், கடவுளையும் ஆன்மிகத்தையும் இணைத்து "தி டைம் அண்ட் பிளேஸ்' என்ற தலைப்பிலும் பாடல்களை இசையமைத்து ஆல்பமாக வெளியிட்டுள்ளேன்.

இந்தப் பாடல்களுக்கு உயிரூட்டும் வகையில் நடனமாடிய கலைஞர்களுக்கு அஷ்லே லோபோ மற்றும் யூகோ ஹராடா ஆகிய இருவரும் பயிற்சியளித்து இயக்கியுள்ளனர். இந்த ஆல்பத்தின் தலைப்பு கோரி இக்குனி எழுதிய ஜப்பானிய நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாகும். நான் இப்போது கோவாவில் தங்கியிருப்பது ஒரு வகையில் எனக்கு ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இங்கு பலதரப்பட்ட கலைஞர்கள் இருப்பதால் இங்கு தங்கியிருப்பதை அதிருஷ்டமாகவே கருதுகிறேன்'' என்கிறார் நோரிகோ சக்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT