மகளிர்மணி

தாம்பூலப் பையின் மகிமை!

14th Oct 2020 06:00 AM | - சுந்தரி காந்தி 

ADVERTISEMENT

 

வெற்றிலை - பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, ரவிக்கைத்துணி என வைத்து நவராத்திரிக்கு வழங்கும் தாம்பூல பையில் இருக்கும்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர்.

வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர். மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.

ADVERTISEMENT

சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக, கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க, வளையல், மன அமைதி பெற பாவம் நீங்க, தேங்காய் அளிப்பதே சிறந்தது. பழம், அன்னதானப் பலன் கிடைக்க, பூ, மகிழ்ச்சி பெருக, மருதாணி, நோய் வராதிருக்க, கண்மை , திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க, தட்சணை, லக்ஷ்மி கடாக்ஷம் பெருக, ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய வழங்குகிறோம். மனிதர்களிடையே பிறர்க்குக் கொடுத்து மகிழும் வழக்கம் வரவே இம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. அப்படி இருக்க, தாம்பூலம் தருவதில் பேதம்பார்ப்பது, தேவியை அவமதிப்பது போலாகும். மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம். தாம்பூலம் கொடுக்கிற சுமங்கலியும் வாங்கும் சுமங்கலியும் இந்த முறைகளை கடைபிடிக்கும் போது மூன்று தேவியரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

நாமும் சந்தோஷமாக இருப்போம். நம்மை சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துவோம்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT