மகளிர்மணி

குத்துவிளக்கை தரையில் வைத்து ஏற்றலாமா?

25th Nov 2020 06:00 AM | -ஆர். ஜெ.

ADVERTISEMENT


அகல் பயன்படுத்தும் முன் தண்ணீரில் நனைத்து காய வைத்து பிறகு விளக்கு ஏற்றினால் எண்ணெய் நிறைய உறிஞ்சாது.
 

*கார்த்திகைக்கு ஏற்றும் விளக்குகளை காலையிலேயே தேய்த்து ஈரம் போக துடைத்து குங்குமப் போட்டு வைத்து திரி போட்டு எண்ணெய் ஊற்றி வைத்துவிட்டால் மாலையில் விளக்கேற்ற சுலபமாக இருக்கும்.

*சிறிய சிறிய விளக்குகளை அகலமான ஒரு தாம்பாளத்தில் அல்லது தட்டில் வரிசையாக வட்டமாக வைத்து தீபம் ஏற்றினால் பார்க்க அழகாக இருக்கும். அதே சமயம் எண்ணெய்யும் தரையில் சிந்தாது.

*வெள்ளி விளக்குகளை விபூதி கொண்டு துடைத்து பிறகு ஏற்றினால் புதிதாக பிரகாசிக்கும்.

ADVERTISEMENT

*பஞ்சு திரியை சிறிய விளக்குகளுக்கு சிறியதாகவும், பெரிய விளக்குகளுக்கு பெரிய திரியாகவும் போட்டால் தீபம் நின்று நிதானமாக எரியும்.

*குத்துவிளக்கை பலகையிலோ அல்லது தாம்பாளத்திலோ வைத்துதான் வைக்க வேண்டும். வெறும் தரையில் வைக்கக் கூடாது.

*விளக்குகளை ஏற்றி முடித்த பிறகு தேய்க்கும்போது முதலில் எண்ணெய்யை வேஸ்ட் துணி கொண்டு துடைத்து பிறகு எலுமிச்சம்பழத்தால் தேய்த்து, பிறகு சபீனா கொண்டு தேய்த்தால் எண்ணெய்ப் பிசுக்கே இல்லாமல் நீங்குவதோடு விளக்கும் ஜொலிக்கும்.

Tags : மகளிர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT