இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 315

DIN


ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது மன்னரைப் பார்க்க மனிதவளத்துறை அமைச்சர்  தன் சகாக்களுடன் வந்திருக்கிறார்.  அவரை அப்போது கிண்டல் செய்யும் மன்னர் அவருடைய ஊழலைக் குறிப்பிடுகிறார். தான் மிகவும் நாணயமானவன் என அமைச்சர் பதிலளிக்க, பகடியாக you are as honest as a cat when the meat is out of reach என்கிறார் மன்னர். இதற்குப் பொருள் என்ன? பூனைக்கும் நாணயத்துக்குமான தொடர்பு என்ன? அமைச்சர் மன்னரிடம் ஆதரவைப் பெறுவாரா? பார்க்கலாம்... வாங்க.

ஜூலி: நாணயம் என்றால் என்ன, எல்லாச் சூழல்களிலும் நேர்மையாக உண்மையாக இருப்பது தானே? ஒருவர் உண்ணாவிரதம் இருப்பதென்றால் என்ன, சாப்பாடு கிடைக்கும் சூழலிலுமொரு கொள்கைக்காக, நீதிக்காக சாப்பிடாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பது தானே? ஆனால் ஒருவரிடம் சாப்பிட உணவோ அதை வாங்க காசோ இல்லை. அப்போது அவர் தான் உண்ணாவிரதம் இருப்பதாக கோரினால் அது பாசாங்கு அல்லவா? அப்படித்தான் நாணயமும். ஒரு பூனையின் உணவுக்கிண்ணம் காலியாக இருக்கும் போது அது கட்டுப்பாட்டுடன் இருப்பதில் வியப்பில்லை. ஆனால் உணவுக்கிண்ணத்தில் கறி உணவு வைக்கப்பட்டிருக்கும் போது அது தன் உரிமையாளரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சாப்பிடாமல் இருந்தால் அது நாணயம். ஆனால் அப்போது பூனையால் சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க இயலாது. அதைத்தான் you are as honest as a cat when the meat is out of reach என்று சொல்லுகிறார்.  தாம் நாணயமாக உள்ளதாக நடிப்பவரை பகடி செய்யும் நோக்கில் பாசாங்காகப் பயன்படுத்தப்படும் பழமொழி அது என்கிறார் மன்னர்.  

கணேஷ்: சரி... அந்த பூனைக்கும் நம் அமைச்சருக்கும் என்ன தொடர்பு? 

ஜூலி: இந்த அமைச்சர் இருக்கிறாரே... அவர் வாய்ப்புக் கிடைத்தால் கொள்ளையடிக்கக் கூடியவர். ஊழல் செய்து கொழுத்தபின் அவ்வப்போது தான் ஒருஅப்பாவி, நேர்மையாளன் என வேடம் போடுகிறவர். அவர் எப்போது எங்கு கொள்ளையடிக்கிறார் என்பதை அந்தந்தச் சூழல்கள் அமையும் போது மட்டுமே நாம் காணவும் நிரூபிக்கவும் முடியும். அப்படி நிபந்தனைக்குட்பட்டு நல்லவனாக இருக்கும் ஒருவரை நாம் பூனையுடன் நிச்சயம் ஒப்பிடலாம். 

வீரபரகேசரி: கச்சிதமான விளக்கம் ஜூலி. உமக்கு நன்றியுடையவன் ஆகிறேன் யான். (மனிதவளத்துறை அமைச்சரை நோக்கி): யோவ், நீர் செய்த ஊழலுக்கு எதிராக நடந்த போராட்டத்தை ஏதோ என்னுடைய ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்பதாக திருப்பி விட்டதை நான் அறிவேன். 

மனிதவளத்துறை அமைச்சர்: ஐயோ இல்லை மன்னா, என்னை நம்புங்கள். 

வீரபரகேசரி: ஊழல் செய்ததற்கும், for ploughing into the protesters with your car and killing 40 people உனக்கு எதிராக விசாரணையை அறிவிக்கிறேன். If proven guilty நீ கைது செய்யப்படுவாய். பதவியைத் துறக்க நேரிடும்.  

மனிதவளத்துறை அமைச்சர்: ஐயோ மன்னா, காரை ஓட்டியது நான் அல்ல, என் மகன். 

வீரபரகேசரி: ஹா... ஹா... மாட்டினாயா? நீ சொன்னதை வாக்கு மூலமாக எடுத்துக் கொண்டு உன் மகனை கைது செய்யும்படி காவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கிறேன்.

(அமைச்சர் கையில் தலைவைத்துக் கொண்டு அதிர்ச்சியில் அமர்கிறார்.) 

கணேஷ்: Plough என்றால் கலப்பை அல்லவா? அதுக்கும் காருக்கும் என்ன சம்பந்தம்?

(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT