இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

DIN

முக நூலிலிருந்து....

கொய்யா மரத்தில்
தாவியேறி ஓடியது அணில்.
சடசடவெனத் தூறியது...
நேற்றுப் பெய்த
மழையின் மிச்சம்.

வெற்றிப்பேரொளி

கால்கள் நடந்து நடந்து
கண்கள் தேடித் தேடி
களைத்துப் போன பின்பு,
கண்டடைந்த ஞானம்...
காலடிதான் சிற்பம்.

நா.வே.அருள்

யாருக்குத் தெரியும்?
யாருக்கேனும் கொடுத்திருக்கலாம்
போகிற வழியில் கிடாசியிருக்கலாம்
அல்லது அந்தக் கிழவியே தின்றுமிருக்கலாம்...
அதியமான் தந்த நெல்லியை.

இரா.எட்வின்

ஒரே அணியில்தான்
விளையாடுகிறோம்.
எனினும், அவரவர் விளையாட்டு
தனித்தனி தானே?

-தமிழ்மணவாளன்

சுட்டுரையிலிருந்து...


மழையை ஓரளவுக்கு தான் ரசிக்க முடியும்...
அளவுக்கு அதிகமானால் "நசநச'ன்னு தான் தோணும்...
ஒருவகையில் அன்பும் அப்படித்தான்.

சண்டக்கோழி


முடியாதவன்
விமர்சிக்கிறான்...
முடிந்தவன்
முயற்சிக்கிறான்,
அவ்ளோதாங்க வாழ்க்கை.

மனிதன்

"சுடும்' என்ற சொல்லை "மதிக்காது' மனது...
சூடு பட்டு வலி "உணரும்' வரையில்

சவேதி

உன்னை நம்பு...
உன் உழைப்பை நம்பு...
உன் முயற்சியை நம்பு...
உனக்காக உதவி
செய்வார்கள் என்று
யாரையும் நம்பி விடாதே...
உன் கையே உனக்கு உதவி.

செண்பகம்


வலைதளத்திலிருந்து...

பொதுவாக பன்றியின் உடல் உறுப்புகள் அளவின் அடிப்படையில் மனிதர்களுக்கு சிறப்பாக பொருந்திப் போகக் கூடியவை.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்குப் பொருத்திய பிறகு அடுத்த இரண்டரை நாட்களுக்கு சிறுநீரகத்தை தீவிரமாகக் கண்காணித்து பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை வல்லுநர்கள் மேற்கொண்டனர். ஒரு பன்றியின் சிறுநீரகம், மனிதர்களின் சிறுநீரகத்தைப் போலவே செயல்படுவதைக் கண்டோம் என மருத்துவர் ராபர்ட் மான்ட்கொமெரி பிபிசி வேர்ல்ட் டுனைட் நிகழ்ச்சியில் கூறினார்.
""அந்த சிறுநீரகம் சீராக வேலை செய்தது, மனித உடல் அதை நிராகரிப்பது போலத் தெரியவில்லை'' என்றார்.
அறுவைச் சிகிச்சை வல்லுநர்கள், சிறுநீரகத்தோடு பன்றியின் ஒரு சிறு பகுதி தைமஸ் சுரப்பியையும் மாற்றியுள்ளனர். நீண்டகாலத்தில், மனித உடல் சிறுநீரகத்தை நிராகரிப்பதிலிருந்து காப்பாற்ற, பன்றியின் திசுக்களோடு போராடும் மனித உடலின் எதிர்ப்புத் திறன் கொண்ட செல்களைத் திரட்டி, நிராகரிப்பைத் தடுக்க இந்த பாகம் உதவும் என மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.
தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக
காத்திருக்கும் 40 சதவீத நோயாளிகள், அவர்களுக்கான உறுப்பு கிடைப்பதற்கு முன்பே இறந்துவிடுகிறார்கள். ""நாம் பன்றியை மருந்துக்காகவும், அதன் ரத்த நாளங்களையும் பயன்படுத்து
கிறோம். எனவே பன்றியின் உறுப்பை மனிதர்களுக்குப் பயன்படுத்துவதும் பெரிய விஷயமல்ல'' என்கிறார் ராபர்ட்.
இந்த உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சிகள் தொடக்க கட்டத்தில்தான் இருக்கின்றன என்றும், இது குறித்து நிறைய ஆய்வுகள் தேவை என்றும் கூறியுள்ளார் மருத்துவர் ராபர்ட்.
இந்த அறுவைச் சிகிச்சையைப் மேற்கொள்ளப்பட்டவரின் குடும்பத்தினர், இந்த சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் எஃப்.டி.ஏ என்கிற உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பும் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்புகளை இது போன்ற ஆய்வுகளுக்குப் பயன்படுத்த அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்தாண்டு காலத்தில் பன்றியின் இதயம், நுரையீரல்,
கல்லீரல் மனிதர்களுக்கு வழங்கப்படலாம் என நம்புகிறார் மருத்துவர் ராபர்ட்.

https://suransukumaran.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT