இளைஞர்மணி

உருவாகிறது ஒரு விண்வெளி நிலையம்!

8th Jun 2021 06:00 AM | -எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய 5 விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருவது நாம் அறிந்ததே. அத்திட்டத்தில் இணைய சீனா முயன்றும் உறுப்பு நாடுகள் அனுமதிக்காததால் தனக்கு என சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தைக் கட்டமைத்து வருகிறது சீனா.
"தியான்காங்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளி நிலையம் பூமியிலிருந்து 340 கி.மீ. முதல் 350 கி.மீ. உயரத்தில் புவியின் குறைந்த சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. 
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த விண்வெளி நிலையப் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ள சீனா, அதற்கான பணிகளை விரைவுபடுத்தி வருகிறது. 
இதன் ஒரு பகுதியாக விண்வெளி நிலையத்தின் மையத் தொகுதியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தியான்úஸா-2 என்ற விண்கலம் மூலம் அனுப்பியது. 
சுமார் 8 மணி நேரப் பயணத்துக்குப் பின்னர் அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. மேலும், விண்வெளி நிலையத்துக்குத் தேவையான   பொருள்களையும் அது கொண்டு சென்றது. 
இதன் தொடர்ச்சியாக தியான்úஸா-3 விண்கலத்தை அடுத்த மாதம் சீனா அனுப்பவுள்ளது. அந்த விண்கலத்தின் மூலம் 3 விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்துக்குச் செல்லவுள்ளனர். அவர்கள் சில மாதங்கள் அங்கு தங்கியிருந்து விண்வெளி நிலைய கட்டமைப்புப்பணியில் ஈடுபடுவார்கள்.
விண்வெளி நிலையம் முழுமையாக கட்டமைக்கப்பட்டதும் அதன் எடையானது ஒரு லட்சம் கிலோவாக இருக்கும். இது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். 
தியான்ஹே என்ற மையத் தொகுதியானது வசிப்பிடம், சேவைப் பிரிவு உள்ளிட்ட மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும். வசிப்பிடமானது சமையலறை, கழிப்பறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வசிப்பறையானது 3 விண்வெளி வீரர்கள் வசிக்கத்தக்க வசதியைக் கொண்டிருக்கும்; விண்வெளி நிலையத்துக்கான வழிகாட்டுதல்கள், கட்டுப்பாட்டையும் அந்த மையத் தொகுதி வழங்கும்.
மேலும், மையத் தொகுதியில் 10 மீட்டர் நீள இயந்திர கரம் இடம்பெறும். விண்வெளி நிலையத்துக்கு வரும் விண்கலங்களை நிலையத்துடன் இணைக்க இந்த இயந்திரக் கரம் பயன்படுத்தப்படும். 
சுமார் 20 டன் எடையுள்ள பொருளை தூக்கவும், விண்வெளி நிலையத்திலிருந்து அகற்றவும் இந்த இயந்திர கரம் திறன் பெற்றிருக்கும். நாடுகளிடையிலான விஞ்ஞான போட்டியால் உருவாகிக் கொணடிருக்கிறது மற்றொரு விண்வெளி நிலையம்.

Tags : உருவாகிறது ஒரு விண்வெளி நிலையம்!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT