இளைஞர்மணி

விண்வெளியில் சுநாமி!

13th Jul 2021 06:00 AM | எஸ்.ராஜாராம்

ADVERTISEMENT

 

கடலுக்குள் அடியில் ஏற்படும் கடுமையான நிலநடுக்கத்தால் சுநாமி பேரலைகள் உருவாவதை நாம் அறிவோம். சுநாமி தாக்குதலின் கொடூரத்தை இந்த உலகம் சந்தித்துள்ளது.
இதேபோல் பூமி கிரகத்துக்கு வெளியே விண்வெளியில் சுனாமி ஏற்படுவதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த சுநாமிக்கு பிளாக் ஹோல்ஸ் எனப்படும் கருந்துளைகளேகாரணம்.
இறந்த நட்சத்திரங்களால்உருவாவதுதான் கருந்துளை. அதிகமான ஈர்ப்புவிசை கொண்ட இந்த கருந்துளைகள் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொள்ளும். துளி கூட அதிலிருந்து தப்ப முடியாது.
கருந்துளைகள் சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கலாம். பெரிய கருந்துளைகள் "சூப்பர் மாஸிவ்' என அழைக்கப்படுகின்றன. இந்த கருந்துளைகள் 10 லட்சம் சூரியனின் எடையைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பால்வெளி அண்டமும் (கேலக்ஸி) ஒரு சூப்பர் மாஸிவ் கருந்துளையைக் கொண்டிருக்கும் எனவிஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த கேலக்ஸி உருவாகிய போதே இந்த சூப்பர் மாஸிவ் கருந்துளைகளும் உருவாகியிருக்க வேண்டுமெனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த மாஸிவ் கருந்துளைகளின் ஈர்ப்பு விசையிலிருந்துதப்பிய வாயுக்களால் விண்வெளியில் சுநாமி போன்ற வடிவம் உருவாகலாம் என நாசா விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.
வான் இயற்பியலாளர்கள் கணினி உருவக நுட்பத்தைப் பயன்படுத்தி இதைக் கண்டறிந்துள்ளதாக நாசா தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை "அஸ்ட்ரோ பிசிக்கல் ஜர்னல்' இதழில் வெளியாகி உள்ளது.
இந்த சுநாமி தொடர்பான சித்திரித்த படங்களை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. எதிர்கால ஆய்வுத் திட்டங்களில் இது தொடர்பான வலுவான ஆதாரங்கள் கிடைக்கலாம் எனவும் அதுவரை கிடைத்திருக்கும் தரவுகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் தமது ஆய்வைத் தொடர்வார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT