இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 305

3rd Aug 2021 06:00 AM | ஆர்.அபிலாஷ்

ADVERTISEMENT

 

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான மன்னர் வீரபரகேசரியின் அரண்மனைக்குச் சென்றிருக்கிறார்கள்.  அங்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது பொருளாதார ஏற்றத்தாழ்வு சம்பந்தமாக கணேஷ் ஒரு கருத்தைச் சொல்ல, அதற்கு ஜூலி இது ஒரு typical two cents என்கிறது. அது என்ன என கணேஷ் புரொபஸரிடம் விசாரித்துக் கொண்டிருக்க விவாதம் எங்கெங்கோ போகிறது. மாமன்னர் வீரபரகேசரி ரொம்ப பதற்றமாகத் தோன்றுகிறார். அமைச்சர்களிடம் விவாதம் பண்ணுகிறார்.

வீரபரகேசரி: நிஜமாவா சொல்றீங்க?
ஒற்றர் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர்: ஆமாம் மாமன்னா. நம் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் 
ஒற்றறிய கரப்பான் பூச்சிகளுக்குள் க்ஷன்ஞ் வைத்து அனுப்பி இருந்தோம் இல்லையா?
வீரபரகேசரி: ஆமாம் ஒற்றர் மற்றும் தேசிய பாதுகாப்பு 
அமைச்சர்: அதில் இந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் "தேமே'வென்று இருக்கிறார்கள். அவர்கள் அடிக்கடி உங்களைப் புகழ வேறு செய்கிறார்கள்.
வீரபரகேசரி: ம்ம்ம்ம்....
ஒற்றர் மற்றும் தேசிய பாதுகாப்பு 
அமைச்சர்: ஆனா நமது அமைச்சர்களோ கரப்பான்பூச்சிகள் தலைகாட்டினதுமே 
உங்களைப் பற்றி அசிங்க அசிங்கமாகப் பேசுகிறார்கள். They badmouth you so grossly it makes be ashamed to repeat the words.

கணேஷ்: அதென்ன bad-mouth? கெட்ட வாயா?
ஜூலி: கெளரவமாகச் சொல்வதென்றால் to denigrate someone. ரொம்ப மட்டம் 
தட்டுவது. துல்லியமாகச் சொல்வதானால் bad-mouthing is belittling people. ஒருவரைப் பற்றி ரொம்ப தாழ்வாக பேசுவது. 
கணேஷ்: To kiss off someone என்பார்களே?
ஜூலி: இதை நீ எங்கே கற்றுக் கொண்டாய்?
கணேஷ்: என் கேர்ல்பிரண்டுக்கு ராமராஜன் படம் ரொம்ப பிடிக்கும். "செண்பகமே' பாட்டுக் கேட்டா 
அழுதுருவா. அதே போல அவளோட அம்மா டி.ஆர் விசிறி. டி.ஆர் பேசுறதைப் பார்த்தா கண்ணீர் விட ஆரம்பிச்சிருவாங்க. ஒருநாள் ஏன் 
இப்படி அம்மா, பொண்ணு ரெண்டு பேரும்   இப்படியொரு டேஸ்ட் வச்சிருக்கீங்க. நல்ல நடிகர்கள் என்றால் விஜய் 
சேதுபதி, பகத் பாசில் மாதிரி இருக்கணும்னு சொன்னேன். 
அவ்வளவு தான் அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது, ய்ங்ஸ்ங்ழ் ங்ஸ்ங்ழ் ந்ண்ள்ள் ம்ங் ர்ச்ச் ப்ண்ந்ங் ற்ட்ஹற்  அப்படீன்னு 
கத்தினாள். ஓ... ஓகே அவளை மட்டம் தட்டினதைத் தான் சொல்றான்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா நான் தான் கிஸ்úஸ பண்ணலையேன்னு குழப்பமும் வந்தது.
ஜூலி: To kiss off someone என்றால் to dismiss someone lightly. 

ADVERTISEMENT

கணேஷ்: ஆனா நான் டிஸ்மிஸ் பண்ணுறதுக்கு நான் என்ன அவளோட கம்பனி ஹெச் ஆர் மேனேஜரா?
ஜூலி: to dismiss என்றால் ஒன்று அல்லது ஒருவர் மதிப்பற்றது / மதிப்பற்றவர் எனக் கருதி புறக்கணிப்பது என்றும் ஒரு பொருள் ஒன்று. He dismissed the idea as unworthy of consideration. அதே போலத் தான் ஆட்டோ அல்லது டாக்ஸிக்கு கட்டணம் செலுத்தி விட்டு அனுப்புவது dismiss. She dismissed the cab at the entrance to the building. அதன் பொருள் ஒருவரை அனுப்புவது. To order or allow someone to leave. 

கணேஷ்: ஆனா அதுல முத்தம் எங்கே வந்துது?
ஜூலி: ஒருத்தருக்கு முத்தம் கொடுத்து குட் பை சொல்லுகிற வழக்கம் மேற்குலகில் உண்டு. பறக்கும் முத்தமோ கன்னத்து முத்தமாகவோ இருக்கலாம். அங்குள்ள கேங்க்ஸ்டர்கள் மத்தியில் இனி ஒருவரை நம் குழுவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என முடிவெடுத்த பின் ந்ண்ள்ள் ர்ச்ச் பண்ணுவார்கள். அப்படித்தான் இந்த மரபுத்தொடர் வழக்கத்துக்கு வந்திருக்க வேண்டும்.
கணேஷ்: ஆத்தாடி இவ்வளவு அரசியல் இருக்குதா? இனி கிஸ் எமோஜி வரும் போது கவனமா இருக்கணும்... 
வீரபரகேசரி: அட அமைதியா இருங்கப்பா (ஒற்றர் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சரிடம்) நீ சொல்லு. 
அவனுங்க என்னை அசிங்கமா திட்டினப்போ உனக்கு எந்த இடத்தில் சந்தேகம் வந்துது?
ஒற்றர் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர்: கரப்பான்பூச்சிகள் மறையும் போது இயல்பாகிடுறானுங்களே. 
அதனால நானும் என் உளவு அமைச்சர்களுமாக யோசித்து ஒரு புதுக் கருவியைக் கண்டுபிடித்து அனுப்பினோம்.

(இனியும் பேசுவோம்)

Tags : Ilaignarmani வாங்க இங்கிலீஷ் பேசலாம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT