இளைஞர்மணி

அழைக்கிறது வேலை!

DIN

கரூர் அரசு பள்ளி சத்துணவு மையங்களில் வேலை

பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 422
அமைப்பாளர் - 158
தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:  21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சமையல் உதவியாளர் - 264
தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.08.2020 தேதியின்படி 21 வயது முதல் - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி ஆணையர்கள் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: அதிகாரப்பூர்வ வலைத்தளமான -இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 30.09.2020
  


தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை


 
பணி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்( ஒப்பந்த கால அடிப்படையிலானது)
காலியிடங்கள்: 16
தகுதி: சமூகப் பணி , சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை மேம்பாடு போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருப்பவர்களுக்கும், கணினித் திறன் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
அனுபவம்: சமூகப் பணி, குழந்தைகள் நலன், சமூக நலன், குழந்தைத் தொழிலாளர் துறையில் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 01.08.2020 தேதியின்படி 26 வயது முதல்  40 வயதிற்குள் இருக்க வேண்டும்.  
சம்பளம்:  மாதம் ரூ. 33,250 (ஒப்பந்த சம்பளமாக) வழங்கப்படும்.  
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரி பார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/job_opportunity என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.  
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய 

அஞ்சல் முகவரி: 
சமூக பாதுகாப்பு ஆணையர் / செயலாளர்,
மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்,
சமூக பாதுகாப்புத் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை -600 010
தொலைபேசி: 044-26421358
மேலும் விவரங்கள் அறிய:  https://www.tn.gov.in அல்லது https://cms.tn.gov.in/sites/default/files/job/SCPS_DCPO_190920.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 09.10.2020 


திருச்சி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியில் வேலை
  

மொத்த காலியிடங்கள்: 215
பணி: சமையலர் - 135
சம்பளம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,000
பணி: தூய்மைப் பணியாளர் - 80
சம்பளம்: தூய்மைப் பணியாளர் (முழு நேரம்) 13 காலிப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.7,700 - 24,200, மற்ற பகுதி நேரப் பணியாளர்களுக்கு ரூ.3000 தொகுப்பூதியம் வழங்கப்
படும். 
தகுதி: விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 
சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்.  
வயதுவரம்பு: 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் திருச்சி மாவட்டம், திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 
மேலும் விவரங்கள் அறிய: https://tiruchirappalli.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 19.10.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT