இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

15th Sep 2020 06:00 AM

ADVERTISEMENT


முகநூலிலிருந்து...

ஒரு சூரியன்...
பல வெளிச்சங்கள்

சுந்தரபுத்தன் நடராஜன்  


வானத்தை அளவிட 
விமானத்தில்  பற...
நிலத்தை அளவிட 
ரயிலில்  பயணி...
நீரை அளவிட 
கப்பலில் பயணம் செய்..
மனிதனை அளவிட 
மனிதத்தன்மையோடு பழகு ! 

மகேஷ் பாபு பத்மநாபன்

ADVERTISEMENT

 

பனி படர்ந்த பின்னிரவு...
இலைகள் தோறும், நிலாச் சொட்டு.

குகை மா.புகழேந்தி


தேடிக்கொண்டிருப்பது ஒரு பித்து
தேடிக்கொண்டிருப்பது  ஒரு வாழ்க்கை முறை
தேடிக்கொண்டிருப்பது  ஒரு தவம்
தேடிக்கொண்டிருப்பது  ஒரு நியமம்
தேடிக்கொண்டிருப்பது...  
தேட முடியும் வரையா?
தேடல் முடியும் வரையா?

உமா மோகன்


சுட்டுரையிலிருந்து...


எல்லாரும் முந்திக் கொண்டு ஏலம் எடுத்தார்கள்... என்னை வெட்டுவதற்கு.
ஆனால் ஒருத்தர் கூட போட்டியின்றி வரவில்லை என்னை வளர்ப்பதற்கு - சாலையோர மரங்கள்.

செல்வமணி 

 

வெறுக்கும் கண்கள்
வேடிக்கை பார்க்கட்டும்.
தனித்து நின்றாலும்
தனித்துவமாய் நில்.

பவி

 

நீ நல்லவனாக இருப்பது முக்கியம் இல்லை... அடுத்தவனும் நல்லவனாக இருக்கணும்.
அப்படி அடுத்தவன் நல்லவனாக இல்லை என்றால்...
அவனுக்கு நீ கெட்டவனாக இருப்பதில் தப்பே இல்லை.

அன்புத் தோழி 

 

நான்தான் பெரியவன்னு நினைச்சிட்டு இருக்குறவன், அந்த நினைப்பு வந்த அடுத்த செகண்டே தாழ்ந்து போகிறான்.

சில்ற

 

வலைதளத்திலிருந்து...

காய்கறிகளின் சில்லறை வணிகம் முற்றிலும் சீர்கெட்டுப் போயிருக்கிறது. காய்கறிக் கடைகளை ஏசி செய்து வைப்பார்கள் எனக் கனவில் கூட நான் நினைத்துப் பார்த்திருக்க வில்லை. அந்தக் கடை நடத்துபவர்கள் எந்தக் காயை உலர வைக்க வேண்டும். எதைக் குளிர்ச்சியில் வைக்க வேண்டும் என்று அறிந்திருக்கவில்லை.
நாள்பட்ட காய்கறிகளைக் காலையில் கடையைத் திறந்தவுடன் துடைத்து அதற்கென்று உள்ள ரசாயன கலவையைப் பூசி பழையபடி பிரெஷ்ஷான காய்கறியாக உருமாற்றுகிறார்கள்.
இந்த ஸ்பிரே செய்யப்பட்ட காய்கறிகளைச் சாப்பிட்டால் உடல் நலனுக்குக் கெடுதி. அதை அறியாமல் மக்கள் குளிர்சாதனமிட்ட கடைகளில் விற்பனை செய்யும் காய்கறிகளை அநியாயவிலை கொடுத்து வாங்குகிறார்கள்.
காய்கறிக் கடை என்றாலே வாசனை வர வேண்டும். திறந்த வடிவில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பசுமை மாறாமல் இருக்க வேண்டும். கிழங்கு வகைகள் வெயிலில் பட வேண்டும், அதை எந்தப் புத்திசாலிக் கண்ணாடி கதவுகள் கொண்ட குளிர்சாதன அறைக்குள் கொண்டு போய் வைத்தவன்.
பெருநகர மக்கள் அன்றாடம் விஷமாகும் காய்கனிகளைத் தான் விலை கொடுத்து வாங்கி உண்ணுகிறார்கள்.
நம் சமையலறையில் நஞ்சு புகுந்துவிட்டது. அன்றாட உணவை நஞ்சாக்கிக் கொண்டே வருகிறார்கள். திட்டமிட்டு நோயை உருவாக்குகிறார்கள். இது போன்ற அடிப்படைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் எப்போதும் போலவே மக்கள் தொலைக்காட்சியின் ஆடல் பாடல்களில், பரபரப்பான தலைப்புச் செய்திகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்பது கூடுதலாகவே வருத்தம் தருகிறது
https://www.sramakrishnan.com/

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT