இளைஞர்மணி

அழைக்கிறது... வேலை!

15th Sep 2020 06:00 AM |  -இரா.வெங்கடேசன்

ADVERTISEMENT


பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் வேலை

நிறுவனம்: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை

பணிகள்: சமையலர்

காலியிடங்கள்: 226
சம்பளம்: மாதம் ரூ.15,700
பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, கரூர், அரியலூர், ஈரோடு,  திருப்பூர், தூத்துக்குடி
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவுகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2020 தேதியின்படி18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: 
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ள மாவட்டத்தின் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட 

ADVERTISEMENT

வேண்டிய ஆவணங்களின் நகல்கள்:
கல்வி தகுதி  சான்று மற்றும் வயது சான்று சாதிச்சான்றிதழ் முன்னுரிமைச் சான்றிதழ் ஆதார் அட்டை குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று வேலை வாய்ப்பகப் பதிவு (இருப்பின்)
சமையல் பணியில் முன் அனுபவச் சான்றிதழ் 
மாவட்ட இணையதள முகவரி:

https://cuddalore.nic.in
https://thoothukudi.nic.in
https://erode.nic.in
https://trichy.nic.in
https://karur.nic.in
https://Ariyalur.nic.in
https://tiruppur.nic.in
https://vellore.nic.in
https://chennai.nic.in

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 18.09.2020

 

எல்காட் நிறுவனத்தில் வேலை

 
பணி: பிரைவேட் செகரட்டரி


காலியிடங்கள்: 4
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுப் பிரிவில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் கணினித் துறையில் ஆபிஸ் ஆட்டோமேஷன் பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000
பணி: டிரைவர்
காலியிடங்கள்: 5
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000
பணி: அட்டென்டர்
காலியிடங்கள்: 10
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 -ரூ. 50,000

விண்ணப்பிக்கும் முறை: www.elcot.in என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்  நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Managing Director, Electronics Corporation of TamilNadu Limited, MHU Complex, II Floor, 692, Anna Salai, Nandanan, Chennai - 600 035

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.09.2020

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT