இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

27th Oct 2020 06:00 AM

ADVERTISEMENT

 

முக நூலிலிருந்து....

நேர்மையாக இருந்து ஏதாவது சாதித்தோமா எனத் தெரியாது ஆனால்...  நாம் நேர்மையாக இருப்பதே  ஒரு சாதனை தான்!
உலகின் மிக சிறந்த  கர்வம் "நேர்மை'

ஹேமவந்தனா

ADVERTISEMENT

 

கேள்விகளைத் தொலைத்துவிடாதே... 
அவை உன்னைச் சரியாய் செதுக்கும்...
பெருசா வருவடா சாமி!

இரா எட்வின் 

 

எதிரில் யாருமில்லை ஆயினும், முற்றுகையிடுகிறது  போர்.
நிராயுதபாணியாய்  எதிர்கொள்கிறேன்... 
கையில்  ஆயுதமாய்ச் சுழல்கிறது...
நம்பிக்கை.

ஆரூர் தமிழ்நாடன்

 

முளைப்பதென  முடிவெடுத்த பிறகு
விருட்சமாகவே முளைக்கிறேன்.  
நீங்கள்... புற்களைத் தானே இலகுவாய் பிடுங்குவீர்கள்? 

பொள்ளாச்சி முருகானந்தம்

 

சுட்டுரையிலிருந்து...


தொலைந்தது பொருளெனில்...
தொலைத்த இடத்தில் தேடுங்கள்,கிடைக்கப் பெறும்.
தொலைத்தது, அன்பெனில்...வேறிடத்தில் தேடுங்கள்; 
நிச்சயம்  நீங்கள் தொலைத்த இடத்தில்கிடைக்காது.

மிருகம்

 

அடை காத்த அன்னையை 
ஒரு போதும் அடைத்துவிடாதீர்கள்...
அநாதை இல்லங்களில்.

தென்றலைத்தேடி 

 

"சும்மா பெருமைக்காகச் சொல்லல' என்றுதான், 
எல்லாத் தற்பெருமைகளும் ஆரம்பிக்கும்.

அமுது

 

வலைதளத்திலிருந்து...

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை  விடுவிக்க எப்படி மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றனவோ...  அப்படி இந்த ஃபேஸ்புக் அடிமைகளையும்  மீட்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டிய  நிலையில் இருக்கிறோம்.
முப்பதாண்டுகளாக பார்க்காத  நண்பனை நேரில் பார்த்தாலும்...  ஃபேஸ்புக் நண்பனுக்கு கமெண்ட் போட்டுக்  கொண்டிருக்கிறோம் நாம்.  
அல்லது  நாளைக்குக் காலை நாலே முக்காலுக்கே  புரட்சி வந்துவிடுவதைப் போல  மல்யுத்தக் களமாக ரவுண்டுகட்டி அடித்துக் கொண்டிருக்கிறோம்.  
இனி வரும் காலங்கள் ஃபேஸ்புக் ரேப்...  ஃபேஸ்புக் மர்டர்...  ஃபேஸ்புக் கிட்நாப் எனப் போகும் போலிருக்கிறது.  
நாம் நமது கருத்துக்களை   மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்   என்கிற அக்கறை  உண்மையிலேயே இருக்குமானால்...
எதிரியைக் கூட நண்பனாக்கக் கூடிய  ராஜதந்திரம்தான் தேவை.
ஆனால் ஃபேஸ்புக்கில் ஜல்லியடிப்பவர்களோ,  நண்பனைக் கூட எதிரியாக்கக் கூடிய மகத்தான "ராஜதந்திரத்தை'க் கையாள்கிறார்கள்.

https://pamaran.wordpress.com/

- ந.ஜீ.

Tags : இளைஞர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT