தினமணி கொண்டாட்டம்

புலம்பெயரும் விலங்குகள், பறவைகள்..!

28th May 2023 12:00 AM | ராஜி ராதா

ADVERTISEMENT


பருவங்கள் மாறும்போது, உணவுக்காக விலங்குகள்,  பறவைகள் சிறந்த வானிலை உள்ள பகுதியை நோக்கியே பயணிக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

பட்டை வால்காட் விட்: உணவுக்காக அலாஸ்காவிலிருந்து நியூசிலாந்துக்கு இடம்பெயருகிறது.

கனடாவாத்து:

பெரிய வடிவ வாத்து. இவை வெயில் காலத்தில் வடக்கு கனடாவுக்குப் பறக்கின்றன. குளிர்காலத்தில் தெற்கு பக்கம் மெக்ஸிகோ, தென் அமெரிக்கா நோக்கி பறக்கின்றன. ஆனால், வல்லுனர்கள் அண்மைக்காலமாக இவற்றின் இடம்பெயர்தல் குறைந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

ஆர்க்டிக் டெர்ன்: அண்டார்டிகாவிலிருந்து ஆர்க்டிக் வட்டம் வரை பறந்து மீண்டும் திரும்பும். ஆண்டில் 60 ஆயிரம் மைல்கள் இவை பறக்கின்றன. பூமியிலிருந்து சந்திரனுக்கான தூரத்தில் இது கால் பகுதியாகும்.

கரிபு கலைமான்: ஆர்க்டிக் பகுதியில் வாழ்கின்றன. இது ஆண்டுக்கு 450 கி.மீ வரை பயணிக்கின்றன.

சாம்பல் திமிங்கிலம்: இதனை பிசாசு மீன் என அழைக்கின்றனர். வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசிக்கின்றன. இது உணவுக்காக 15 ஆயிரம் கி.மீ வரை பயணிக்கின்றன.

ஹம்பேக் திமிங்கிலம்: துருவங்களுக்கு அருகேயுள்ள இடங்களில் உலாவும் இந்தத் திமிங்கிலம், 8 ஆயிரத்து 300 கி.மீ வரை பயணிக்கும்.

மோனார்க் பட்டாம்பூச்சி: வட அமெரிக்காவில் மோனார்க் பட்டாம்பூச்சிகள் பருவக் காலத்தில் கலிபோர்னியாவிலிருந்து மேனே வரையிலான தோட்டங்களுக்கு இடம்பெயருகின்றன. குளிர்காலத்தைக் கழிக்க மெக்ஸிகோ செல்லும். ஆனால், ஒரே பட்டாம்பூச்சி அல்ல. அவை சில வாரங்களே உயிர்வாழும் என்பதால், அடிப்படை பட்டாம்பூச்சியின் பிற்கால வாரிசுகள் செல்கின்றன.

பட்டைவால் மூக்கன் பறவை: பறப்பதில் உலக சாதனை படைத்தது. ஆய்வுக்காக அதன் கழுத்தில் டோக்கன் கட்டியிருந்தனர். அது நிற்காமல் 13 ஆயிரத்து 560 கி.மீ. பயணித்தது. அதாவது 11 நாள்கள் ஒருமணி நேரம் தொடர்ந்து பறந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT