தினமணி கொண்டாட்டம்

உணவே மருந்து! மருந்தே உணவு!!

தினமணி
  • மூளைக்கு வல்லாரை
  • முடிவளர நீலிநெல்லி
  • ஈளைக்கு முசுமுசுக்கை
  • எலும்புக்கு இளம்பிரண்டை
  • பல்லுக்கு வேலாலன்
  • பசிக்கு சீரகமிஞ்சி
  • கல்லீரலுக்கு கரிசாலை
  • காமாலைக்கு கீழாநெல்லி
  • கண்ணுக்கு நந்தியாவட்டை
  • காதுக்கு சுக்குமருள்
  • தொண்டைக்கு அக்கரகாரம்
  • தோலுக்கு அருகுவேம்பு
  • நரம்பிற்கு அமுக்குரான்
  • நாசிக்கு நொச்சிதும்பை
  • உரத்திற்கு முருங்கைப்பூ
  • ஊதலுக்கு நீர்முள்ளி
  • முகத்திற்கு சந்தனநெய்
  • மூட்டுக்கு முடக்கறுத்தான்
  • அகத்திற்கு மருதம்பட்டை
  • அம்மைக்கு வேம்புமஞ்சள்
  • உடலுக்கு எள்ளெண்ணெய்
  • உணர்ச்சிக்கு நிலப்பனை
  • குடலுக்கு ஆமணக்கு
  • கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
  • கருப்பைக்கு அசோகுபட்டை
  • களைப்பிற்கு சீந்திலுப்பு
  • குருதிக்கு அத்திப்பழம்
  • குரலுக்கு தேன்மிளகே!
  • விந்துக்கு ஓரிதழ்தாமரை
  • வெள்ளைக்கு கற்றாழை
  • சிந்தைக்கு தாமரைப்பூ
  • சிறுநீர்க் கல்லுக்கு சிறுகண்பீளை
  • கக்குவானுக்கு வசம்புத்தூள்
  • காய்ச்சலுக்கு நிலவேம்பு
  • விக்கலுக்கு மயிலிறகு
  • வாய்ப்புண்ணுக்கு மணத்தக்காளி
  • நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  • நீரிழிவுக்கு ஆவாரைக்குடிநீர்
  • வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
  • வெட்டைக்கு சிறுசெருப்படையே
  • தீப்புண்ணுக்கு குங்கிலியவெண்ணெய்
  • சீழ்காதுக்கு நிலவேம்பு
  • நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
  • நஞ்செதிர்க்க அவரிஎட்டி
  • குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
  • குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
  • பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  • பெருவயிறுக்கு மூக்கிரட்டை
  • கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
  • கழிச்சலுக்கு தயிர்சுண்டை
  • அக்கிக்கு வெண்பூசனை
  • ஆண்மைக்கு பூனைக்காலி
  • வெண்படைக்கு பூவரசு கார்போகி
  • விதைநோயா கழற்சிவிதை
  • புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  • புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
  • கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  • கரும்படை வெட்பாலைசிரட்டை
  • கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  • கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
  • உடல்பெருக்க உளுந்துஎள்ளு
  • உளம்மயக்க கஞ்சாகள்ளு
  • உடல்இளைக்க தேன்கொள்ளு
  • உடல் மறக்க இலங்கநெய்யே
  • அருந்தமிழர் வாழ்வியலில்
  • அன்றாடம் சிறுபிணிக்கு
  • அருமருந்தாய் வழங்கியதை
  • அறிந்தவரை உரைத்தேனே!

- இந்திய மருத்துவம்,
ஹோமியோபதி துறை,
சித்த மருத்துவப் பிரிவு, பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT