தினமணி கொண்டாட்டம்

அம்பேத்கரும் பரோடா மன்னரும்..!

ராஜேஸ்வரி


பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்வாட் 3-இன் வாழ்க்கையை எழுதி நூலாக வெளியிட விரும்பினார் அம்பேத்கர்.

மும்பை எல்பின்ஸ்டன் கல்லூரியில் படித்தபோது, மாதம்தோறும் ரூ.25-ஐ அம்பேத்
கருக்கு மன்னர் அனுப்பியுள்ளார். பிறகு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தங்கி, பட்டமேற்படிப்பு படித்தபோதும் மாதம் 11.5 டாலர் அனுப்பியுள்ளார். அடுத்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளியியல் படித்தபோதும், அம்பேத்கருக்கு மன்னர்உதவியாக இருந்தார். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக, மன்னரின் வாழ்க்கை வரலாற்றை எழுத அம்பேத்கர் விரும்பினார்.

""மன்னர்தான் எனக்கு உயர்கல்வியை அளித்து, பொதுவாழ்வில் நான் வகிக்கும் இடத்தை அடைய செய்தவர்' என்றார் அம்பேத்கர். நூல் எழுதும் விருப்பம் நிறைவேறவில்லை.

தற்போது பரோடாவில் சாயாஜி ராவ் கெய்வாட் 3-இன் நினைவகம் உருவாகி வருகிறது. அது நிறைவு பெறும் நிலையிலும் உள்ளது.

பெண்கள் கல்வி, தீண்டாமை ஒழிப்பு, விதவைகள் மறுமணம் உள்ளிட்டவற்றில் மன்னர் அக்கறை காட்டியதும் நினைவு கூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT