தினமணி கொண்டாட்டம்

'கம்பதாசன்' பெயர் வந்தது எப்படி?

2nd Oct 2022 06:00 AM | ராஜிராதா

ADVERTISEMENT

 

தமிழ்த் திரையுலகில் எண்ணற்ற பாடல்களை ரசிகர்களுக்கு அளித்தவர் கம்பதாசன். 1970-இல் வெளிவந்த "குமார சம்பவம்'  கடைசிப் படம். ""புதுமையான நளினமான மொழி நயமுள்ள பாடல் எழுதுவதற்கு கூப்பிடு கம்பதாசனை!'' என்று அவரை விரும்பிப் பயன்படுத்தினார்கள் என்றார் கவிஞர் சுரதா.
கம்பதாசன் என்ற பெயர் கம்பனுக்கு மரியாதை தர வைத்துக் கொள்ளப்பட்டதா என கேட்டால் உடனே மறுப்பார் கம்பதாசன்.
"கம்' என்றால் அழகு. "பர்' என்றால் பாட்டு. கம்பதாசன் என்றால் "அழகிய பாட்டுக்குச் சொந்தக்காரர்' என்பார்.
""1960-களுக்கு முன்னால் திரைத்துறையில் ஓரளவு வசதியாக ஒரு கவிஞர் இருந்தார். மும்பைக்காரர்கள் படம் எடுத்தால் அவரைத்தான் கூப்பிடுவார்கள். நிறைய பணம் தருவார்கள்'' என கம்பதாசன் குறித்து கண்ணதாசன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT