தினமணி கொண்டாட்டம்

நிலத்துக்கு அடியில் ஆடம்பர கிராமம்!

27th Nov 2022 06:00 AM | எஸ். தென்றல்

ADVERTISEMENT


மண்ணுக்குக் கீழ் சுரங்கம்தான் இருக்கும். தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்தடியில் எல்லா ஆடம்பர, பொழுதுபோக்கு வசதிகளுடன் ஒரு கிராமமே அமைந்துள்ளது.

மண்ணின் அடியில் இருக்கும் இந்தக் கிராமத்தின் பெயர் "கூப்பர் பேடி'. சுமார் 3,500 பேர் 1,500 வீடுகளில் எந்தப் பிரச்னையும் இன்றி ஒற்றுமையுடன் வசிக்கின்றனர்.

"கூப்பர் பேடி' பெயருக்குத்தான் கிராமம். கிராமத்தில் மக்கள் வசிக்கும் வீடுகள் தவிர, அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியம், மது விற்கப்படும் பார்கள், விடுதிகள் என்று நகரத்து வசதிகள் அனைத்தும் உள்ளன.

இத்தனை ஏன்? இணைய வசதி கூட இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த அதிசய மண்ணடி கிராமம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பாலைவனமாக இருந்ததாம். மக்கள் வாழ பொருத்தமான தட்ப வெப்பநிலை இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். சிரமங்களைப் பொறுக்க முடியாமல் வெளியேறினர்.

1915-ஆம் ஆண்டு வாக்கில் இந்தப் பகுதியில் சுரங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட. மண்ணுக்குள் மக்கள் வாழும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தக் கிராமத்தில் மக்கள் மீண்டும் தங்கி வாழ ஆரம்பித்தனர்.

கோடை என்றாலும் குளிர் காலம் என்றாலும் வாழும் மக்கள் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவுக்கு இருப்பதால், எந்தச் சிரமமும், கஷ்டமும் இல்லாமல் மக்கள் எல்லா பொழுதுபோக்கு வசதிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT