தினமணி கொண்டாட்டம்

இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் ஆளுநர்!

சுஜித்குமார்


அமெரிக்க மேரிலாந்து மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக (லெப்டினன்ட் கவர்னர்) தேர்வு செய்யப்பட்டு வரலாறு படைத்துள்ளார் இந்திய வம்சாவளிப் பெண் அருணா மில்லர்.

அமெரிக்க நாடாளுமன்ற, மாகாண சபைகளுக்கும், ஆளுநர், செகரட்டரி ஆஃப் ஸ்டேட் உள்ளிட்ட இதர பதவிகளுக்கும்  நடைபெற்ற இடைத் தேர்தல்களில் ஏற்கெனவே பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர்களாக இருந்த அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்ய்பட்டனர்.மேரிலாந்து மாகாணத்தின் புதிய லெப்டினன்ட் ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர்.   
58 வயதான அருணா மில்லர், இந்தியாவின் ஹைதராபாதை பூர்வீகமாகக் கொண்டவர். தனது 7 வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார்.

அவரது தந்தை நியூயார்க்கில் ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நியூயார்க், மிசெளரி, பால்வின் உள்ளிட்ட இடங்களில் பள்ளிப் படிப்பை முடித்த அருணா, மிசெளரி அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சிவில் துறையில் பொறியியல் பட்டதாரி படிப்பை நிறைவு செய்தார். பின்னர் கலிபோர்னியா, விர்ஜினியா, ஹவாய் உள்ளிட்ட இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் போக்குவரத்து பொறியாளராக வேலை செய்தார்.

1990-இல் மேரிலாந்துக்கு குடியேறிய அருணா மான்ட்கோமெரி கவுன்டி போக்குவரத்து துறையில் பணிபுரிந்தார்.  2015 முதல் மேரிலாந்து சட்டப்பேரவையில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். மக்கள் நலனுக்காக பல்வேறு தனிநபர் சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார் அருணா. 

2000-இல் அமெரிக்க நாட்டு குடியுரிமை பெற்ற அருணா ஜனநாயகக் கட்சியில் இணைந்து பணிபுரிந்தார். அமெரிக்கா அதிபராக இருந்த பராக் ஒபாமா, துணை அதிபராக இருந்த அல் கோர் ஆகியோரின் ஆதரவாளராக அடையாளம் காணப்பட்ட அருணா, மேரிலாந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.  முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்த அருணா மில்லர் 2018-இல் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

லெப்டினன்ட் ஆளுநராக தேர்வு: பின்னர்,  அமைதியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்த அருணா மில்லர், ஜனநாயக கட்சி சார்பில் வெஸ் மூர் என்பவருடன் இணைந்து போட்டியிட்டார். கடந்த நவ. 8-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சியின் டேன் காக்ஸ்-கோர்டானா ஆகியோரை வீழ்த்தியது அருணா அணி.

முதல்முறை சாதனை: இதன் மூலம் அமெரிக்காவில் முதன்முதலாக லெப்டினன்ட் ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்ட தெற்காசிய பெண், முதல் அமெரிக்க-ஆசியர், மாநிலம் தழுவிய பொறுப்பு வகிக்கும் முதல் குடிபெயர்ந்தவர் என்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

கல்லூரியில் உடன் படித்த டேவிட் மில்லரை மணந்த அருணாவுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT