தினமணி கொண்டாட்டம்

எனது கதாபாத்திரத்தில் தீபிகா! - பி.வி. சிந்து

பவன்

பேட்மிண்டன் சாம்பியன் பி. வி. சிந்து ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை பதக்கங்களை வென்றவர். இருப்பினும், ""பாரிஸில் 2024-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஓலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வெல்வதே தனது லட்சியம்'' என்று தெரிவித்தார். தனது வாழ்க்கை திரைப்படமாக்கப்பட்டால், தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்ற ஆவலையும் சிந்து வெளிப்படுத்தினார்.

கடுமையான பயிற்சியில் இருக்கும் பி.வி.சிந்து அளித்த ஓர் மினிபேட்டியில் கூறியதாவது:

""கரோனா காலமான 2 ஆண்டுகளில் அதிகம் கற்றுகொண்டேன். வெற்றிகரமான தொடருக்கு இடையில் தோல்வியுற்ற வாழ்க்கை, சூழ்நிலைகள் இருக்கின்றன. இரு சூழல்களிலும் பழகிவிட்டேன். எப்போதும் நேர்மறையான வழியில் எடுத்துகொள்வேன். நான் வருத்தப்பட்டிருந்தாலும், அந்தக் கட்டத்தில் இருந்து விரைவாக வெளியேறி, தவறுகளில் இருந்து பாடம் கற்றுள்ளேன்.

எனது பெற்றோருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அவர்கள் விளையாட்டு வீரர்கள் என்பதால், அவர்களின் அனுபவம் மிகவும் உதவியாக இருந்தது. இப்படிப்பட்ட பெற்றோர் கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளன. தீவிர பயிற்சியில் இருக்கிறேன். எல்லாவற்றையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். மன, உடல் வலிமைகள் இங்கு முக்கியம்.

வெற்றியைத் தொடரும் சூழ்நிலைகள் இருக்கலாம். தோல்வியும் பெறலாம். மனதளவில் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் அவை. அதைப் பயிற்சியாகச் செய்து வருகிறேன். எப்போதும் வெற்றி பெற விரும்புகிறோம். உடல் தகுதியை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது.

அடுத்த ஒலிம்பிக்ஸூக்கு நேரம் இருக்கிறது, டோக்கியோவுக்குப் பிறகு, 2024-இல் பாரிஸிலும் பதக்கம் பெற வேண்டும் என்று மக்கள் விரும்புவது எனக்குத் தெரியும். நிறைய பொறுப்பும் உள்ளது, நான் ஒரு நேரத்தில் ஒரு போட்டியை சந்திக்கவே விரும்புகிறேன். இந்த ஆண்டு நிறைய போட்டிகள் உள்ளன. அவற்றை எதிர்நோக்கியுள்ளேன். ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வேன்.

கர்நாடகத்தில் நடைபெறும் உள்நாட்டு போட்டிகள் அடிமட்டத்திலிருந்து பலரை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும். ஒரு சர்வதேச பேட்மிண்டன் வீரராக இருப்பதும், பிராண்ட் அம்பாசிடராக மக்களை ஊக்குவிப்பதும் உள்நாட்டுப் போட்டிகளுக்கு உறுதுணையாக இருக்கும். சர்வதேச தரத்துக்கு நிறைய வீரர்களைக் கொண்டு வர, இதுபோன்ற போட்டிகள் உதவும்.

என்னை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால், அது ஒரு சாம்பியனாவதற்கு என்ன தேவை என்பதை இளைஞர்களை பார்க்கத் தூண்ட வேண்டும். அந்த நிலைக்கு வர ஓரிரு மாதங்கள் அல்ல; பல ஆண்டுகள் ஆகும். ஆனால் அந்த வாழ்க்கை வரலாற்றில், எனது கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கவே விரும்புகிறேன். அவர் நன்றாக பேட்மிண்டன் விளையாடுவார், அவருடன் விளையாடியுள்ளேன். அவருடைய விளையாட்டையும் பார்த்திருக்கிறேன். அவர், அவரது அப்பா பிரகாஷ் படுகோனே போன்று அவரும் நல்ல விளையாட்டு வீரர். தீபிகா படுகோனேவால் எனது கதாபாத்திரத்தை வெற்றிகரமாகச் செய்ய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT