தினமணி கொண்டாட்டம்

கலை இயக்கத்தில் தனித்துவம்

17th Jul 2022 04:44 PM

ADVERTISEMENT

 

இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியாகியுள்ள "யானை' படத்துக்கு பரவலான வரவேற்பு எழுந்துள்ளது.
படத்தின் காட்சிகளில் வரும் கச்சத் தீவு மாடல், மார்க்கெட் உள்ளிட்டவற்றை தனித்துவமாக காட்டியிருக்கிறார் கலை இயக்குநர் மைக்கேல். அவரிடம் பேசும் போது... "" குமரி மாவட்டத்தில் இருக்கும் குலசேகரம் எனது ஊர். சிறு வயதில் இருந்தே ஓவியக்கலையின் மேல் ஓர் ஈர்ப்பு. அதோடு  சினிமாவின் மீதும். ஓவியம் படித்து விட்டு,  சினிமாவின் கலை இயக்குநர் பிரிவுக்கு வந்து விட்டேன். கலை இயக்குநர் முத்துராஜ் என் குருநாதர். முதல் படம் "கொம்பு வச்ச சிங்கமடா'. பின்னர் "சினம்', "எஃகோ', "ஓ மை டாக்' படங்கள் முடித்தேன். இப்போது "யானை'. பாராட்டுக்களுக்கு நன்றி. அடுத்து சமுத்திரகனியின் "தலைக்கூத்தல்'.
சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும். கதைதான் முக்கியம். இதுதான் கதை என தீர்மானமாக பிடித்து விட்டால், அந்தக் கதையில் இறங்கி வேலை பார்ப்பேன். நெடுந்தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் இயக்குநர்கள், நல்ல நல்ல கதைகள், நெருக்கமான மனிதர்கள் என எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. 
சினிமா ஒரு பதற்றத்துடன் நிற்க வேண்டிய இடம்தான். ஆனால் நம்பிக்கையோடு உழைத்தால், ஆசீர்வதிக்கப்பட்ட இடம் கிடைக்கும். பார்க்கலாம்....  உன்னதமான நேரம் இது. சுவாரஸ்யமான, தீவிரமான படங்களுக்கான காலம்தான் இனி. அப்படி வரும் படங்களில் நான் நிச்சயம் இருப்பேன். கேட்டதை விட, நினைத்ததை விட எல்லாமே அடுத்தடுத்து நல்லதாகவே 
நடந்து கொண்டு வருவதால்,  இது நிச்சயம் சாத்தியப்படும்.. என்கிறார் மைக்கேல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT