தினமணி கொண்டாட்டம்

காதல் உணர்வுகளின் கதை

16th Jan 2022 06:00 AM

ADVERTISEMENT

 

கார்த்திக் மதுசூதன் கதை எழுதி இயக்கி நடித்து வரும் படம் "டூடி' .  ஷ்ரித்தா சிவதாஸ்,  ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி, சனா ஷாலினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் பற்றி இயக்குநர் கார்த்திக் மதுசூதன் கூறியதாவது..."" மனித உணர்வுகளின் மிகப்பெரிய உணர்வு என்றால் அது காதல்தான், அதற்கு எதிர்மறையானது கோபம். 18 வயதில் ஏற்படுகின்ற எண்ணங்கள் 25 வயதில் மாறும்.  25 வயதில் ஏற்படும் எண்ணங்கள் 30 வயதில் மாறும்.  இதை அடிப்படையாக வைத்து  தான் இந்த படத்தின்  திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் காதலித்து ஒரே வருடத்தில் நீ செய்றது எனக்கு பிடிக்கல நான் பண்றது உனக்கு பிடிக்கல நீ சரி இல்ல நான் சரியில்ல அப்பறம் பிரேக் அப், காதல் தோல்வி எல்லாம். அந்த உணர்வுகள்தான் இந்த படம் முழுக்க பயணிக்கும். சென்னை மற்றும் பெங்களூருவில் நடக்கும் கதைக்களம் இது.சென்னை, பெங்களூர், கூர்க் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.  படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில் தற்போது படத்தில் இடம்பெறும் " ரகசிய காதலனே வா வா' பாடலும் சமீபத்தில் வெளியாகியுள்ளது'' என்றார் இயக்குநர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT