தினமணி கொண்டாட்டம்

பிரபாகரனின் வாழ்வியல் சினிமா 

14th Aug 2022 04:23 PM

ADVERTISEMENT

 

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரனின் வாழ்வியலை மையப்
படுத்தி உருவான "மேதகு' படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, "மேதகு-2' படம் தயாராகி வருகிறது.

சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்னைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  பிரபாகரன் வேடத்தில்  கெளரிசங்கர்  நடிக்கிறார். கெளரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார். இரா.கோ யோகேந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். வரும் 19-ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT