தினமணி கொண்டாட்டம்

காமராஜரை வணங்கிய எம்.ஜி.ஆர்

DIN

தனது  இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வித்தவர் எம்.ஜி.ஆர்.

அவருக்கு, ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த விருப்பம்.  ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி"சொல்றேன்' என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்.

ஒரு முறை சிவாஜி, எம்.ஜி.ஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்திருந்தார்.

காமராஜரை வழியனுப்பும் போது மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்.ஜிஆர். அப்போதும் அதே புன்னகை மாறாமல் "ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக்கூடாது என்றில்லை. உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அறுசுவை உணவும் மீன் இறைச்சியும் அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள். நான் மக்கள் ஊழியக்காரன் ரெண்டு இட்லி, தயிர் சோறு தான் எனக்கு சரிப்படும் உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திரும்பவும் அந்த ருசியை நாக்கு தேடும்..அதுக்கு நான் எங்கே போறது' என்று கூற ஆடிப்போனார் எம்.ஜி.ஆர்.

தன்னையும் அறியாமல் காமராஜரை கைகூப்பி வணங்கினார் எம்.ஜி.ஆர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT