தினமணி கொண்டாட்டம்

வரவேற்பைப் பெற்ற குறும்படம் 

17th Oct 2021 06:00 AM

ADVERTISEMENT

 

18 வயதேயான ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் இயக்கிய "காற்றினிலே' குறும்படத்துக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 50 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படம் சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பிறகு தனது கருத்துகளைப் பகிர்ந்த இயக்குநர் கே. பாக்யராஜ்....""

ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு முதல் காட்சி மிகவும் முக்கியமானது. அதை இந்த இளம் குழு அற்புதமாக செய்துள்ளது. இயக்குநர் ஈஸ்வர் கோபால கிருஷ்ணனின் தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டும். இந்த படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் நண்பர்களையும் பாராட்டுகிறேன். தங்கள் மகனின் ஆர்வத்தை அடையாளம் காட்டியதற்கும், அவர் விரும்பிய பாதையில் தொடர ஊக்குவிப்பதற்கும் ஈஸ்வரின் பெற்றோருக்கு நன்றி கூற விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார். ஈஸ்வர் கோபால கிருஷ்ணன் பேசும் போது.... ""

இது ஒரே இரவில் இரண்டு பேருக்கு இடையே நடக்கும் காதல் கதை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, ராம் இயக்கிய "கற்றது தமிழ்' படத்தைப் பார்த்தேன். அதில் ஒரு பாடலில் வரும் ""கதை பேசிக்கொண்டு வா காற்றோடு போவோம்'' என்ற ஒரு குறிப்பிட்ட வரி இந்த படத்திற்கு உத்வேகம் அளித்தது. 6-ஆம் வகுப்பிலிருந்து எனது நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை உருவாக்க தொடங்கினேன். பின்னர் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்க விரும்பினேன், இதன் விளைவாக இப்போது இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஈஸ்வரின் தாயார் விஜி பாலசந்தர் தயாரித்துள்ளார். யோகான் மனு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை சுதர்ஷன். ஆர் செய்துள்ளார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT