தினமணி கொண்டாட்டம்

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்

முத்து ராஜா


ஒரு விவசாயி வளர்த்து வந்த பொதி சுமக்கும் வயதான கழுதை ஒன்று... தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட  பாழும் கிணற்றில் விழுந்துவிட்டது.

உள்ளே விழுந்த கழுதை அலறிக் கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட, அதிகம் செலவு பிடிக்க கூடியதாக இருந்தது.

அந்தக் கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால், அதைக் காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்தக் கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.

அக்கம் பக்கத்தினரை உதவிக்குக் கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை, மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்தக் கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர்.

கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை.  இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட, கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது. ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பில் ஆழ்த்தியது. 

ஒவ்வொரு முறையும் மண்ணைக் கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின்மீதே நின்று வந்தது. இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளித் தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால், அனைவரும் வியக்கும் வண்ணம், ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது. விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை, ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இந்தக் கழுதை போல, தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும். மன உறுதி, தன்னம்பிக்கை வளருமாறு குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக் கொடுப்பது சிறப்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’

SCROLL FOR NEXT