தினமணி கொண்டாட்டம்

வியக்க வைக்கும் பிரம்மாண்டம்

தினமணி


உலகின் அனைத்து திசைகளிலுமிருந்து வரும் சுற்றுலா வாசிகளை கவரும் அழகும், ரம்மியமும் கொண்ட இடம்  எல்லோரா குகை. இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. 

உலகின் மிக பழமையான குடவரை கோயில் இது. முதலாம் கிருஷ்ணர் என்ற மாமன்னரால் கட்டப்பட்டது. இந்த மொத்த கோயிலும் ஒரே மலையை குடைந்து கட்டப்பட்டது. எல்லோரா எனும் கிராமத்தில் சரநந்திரி எனும் ஒரே ஒரு மலையை குடைந்து "கைலாசா' எனும் கோயிலை உருவாக்கியுள்ளனர்.

இமய மலையில் இருக்கும் கைலாச நாதரின் பிம்பத்தை பிரதிபலிப்பதற்காக இந்த கைலாசா கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலை இன்றும் சற்றுஆராய்ந்து பார்த்தால், கட்டடக் கலைஞர்கள் இந்த குடவரை கோயிலுக்கு ஆதியில் ஒரு வெள்ளை நிற பூச்சை பூசியுள்ளனர். இதன் மூலம் இந்த இடம் பார்ப்பதற்கு கைலாசத்தை பிரதிபலிக்கும் என எண்ணியுள்ளனர். 

உலகிலேயே மிக பழமையான ஒற்றை பாறையை குடைந்து கட்டப்பட்ட மிக பிரம்மாண்டமான பல அடுக்குகளை கொண்ட கோயில் இதுவே. தொல்லியல் ஆய்வின் போது மேற்கத்திய ஆய்வாளர்கள் எல்லாம் இதன் பிரம்மாண்டத்தை கண்டு வியந்துள்ளனர். காரணம் இது ஏதென்ஸில் இருக்கும் பார்த்தினான் பகுதியை விட மிகப் பெரியது.

இந்த மலைகளுக்கு வயது 65 மில்லியன் ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த மலைகள் எழும்பியுள்ளன. இதில் மேற்குப்பகுதி மலையில்தான் குகைகள் குடையப்பட்டுள்ளது. பல நதிகளுக்கு மூலஸ்தானம் இந்த மலைகள் . இதில் குறிப்பாக "எலகங்கா' நதி குறிப்பிடத்தக்கது.  

எல்லோரா குகைகளை குடைந்து கலை ஓவியங்களை உருவாக்கினர். மலைத்தொடரில் சுமார் 100 குகைகள் உள்ளன. இதில் 34 குகைகள் மட்டுமே பயணிகளை ஈர்த்துள்ளது. இதில் எண் ஒன்று முதல் 12 வரையிலான குகைளில் பவுத்தக் கலைகளை காணலாம். குகை எண் 13 முதல் 29 வரை இந்து  கலைப் படைப்புகளை காணலாம். 30 முதல் 34-ஆம் குகைகள் ஜைன மதம் சார்ந்தவை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT