தினமணி கொண்டாட்டம்

ஜோதிகா நடிக்கவில்லை!

6th Jun 2021 06:00 AM

ADVERTISEMENT


"கேஜிஎப்' படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம் "சலார்'. பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையே தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். "36 வயதினிலேயே' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதன்பிறகு "மகளிர் மட்டும்', "காற்றின் மொழி', "நாச்சியார்', "தம்பி'," ஜாக்பாட்', "பொன்மகள் வந்தாள்'' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் "சலார்' படத்தில் பிரபாசுக்கு அக்காவாக ஜோதிகா நடிப்பதாக தகவல் ஒன்று சமீபத்தில் வெளியானது. இது குறித்து விளக்கமளித்துள்ள நடிகை ஜோதிகா, "இந்த தகவலில் உண்மையில்லை என்றும், அது தவறான தகவல்' என்றும் தெரிவித்துள்ளார். 

Tags : Jyotika is not acting!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT