தினமணி கொண்டாட்டம்

ஏழைக்கு உதவி

25th Jul 2021 06:00 AM | -ராஜி

ADVERTISEMENT

 

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் வழக்கறிஞராக பணியாற்றியபோது, பணக்காரர் ஒருவர் அவரிடம் வந்தார். அவருக்கு ஏழை ஒருவர் ஐந்து டாலர் கடன் கொடுக்க வேண்டியிருந்தது.

பணக்காரர் விவரத்தைச் சொல்லி, அவர் மீது வழக்குப் போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

"வெறும் ஐந்து டாலர்களுக்காகவா வழக்கு போடப் போகிறீர்கள்?' என்று லிங்கன் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தும் அந்தப் பணக்காரர் கேட்பதாக இல்லை.

ADVERTISEMENT

"சரி, எனக்கு வழக்காடுவதற்காக 10 டாலர் கட்டணமாக நீங்கள் தர வேண்டும்' என்று லிங்கன் கேட்டார்.

பணக்காரரும் 10 டாலர்களை உடனே லிங்கனிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட  லிங்கன்,  அந்த ஏழையை அழைத்து அவரிடம் 5 டாலர்களைக் கொடுத்துக் கடனை அடைக்கச் சொன்னார்.

பணக்காரரும் கடன் தொகை கிடைத்த மகிழ்ச்சியில் தமது இல்லம் திரும்பினார்.

Tags : Kondattam Helping the poor
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT