தினமணி கொண்டாட்டம்

நடிக்க வரும் வாரிசு

24th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் "மாஸ்டர்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது.  
இது தவிர, "கடைசி விவசாயி', "மாமனிதன்', "லாபம்', "யாதும் ஊரே யாவரும் கேளிர்', "துக்ளக் தர்பார்', "காத்துவாக்குல ரெண்டு காதல்', என அவர் கைவசம் இருக்கும் படங்களின் பட்டியல் நீள்கிறது. விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும், ஸ்ரீஜா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் மகன் சூர்யா அவரது "சிந்துபாத்' படத்தில் நடித்தார். 
இந்நிலையில் தற்போது மகளையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துகிறார் விஜய் சேதுபதி. நடிகை ரெஜினா உடன் அவர் இணைந்து நடிக்கும் "முகிழ்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் ஸ்ரீஜா. கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர்  வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT