தினமணி கொண்டாட்டம்

பெருமை சேர்த்த  தலைவர்கள்

ராஜிராதா


சமீபத்தில் பிரிட்டிஷ் தபால் துறையான  "ராயல் மெயில்' பாரம்பரியம் மிக்க 8 தலைவர்களின் தபால் தலைகளை வெளியிட்டிருந்தது. இதில் பிரபல இந்திய இளவரசி சோபியா அலெக்சாண்டிராவின் (1876-1948) தபால் தலையும் அடக்கம்.

இனி வெளிநாடு சார்ந்த தபால் தலைகளில் இடம் பெற்ற இந்திய பிரபலங்கள் பற்றி பார்ப்போம்:

மகாத்மா காந்தி

இந்தியா நீங்கலாக 150-க்கும் அதிகமான நாடுகளில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியாகியுள்ளது. பிரிட்டன், ஈரான், இத்தாலி, சிரியா, மொராக்கோ, அமெரிக்கா, உகாண்டா, மொரீஷியஸ் உட்பட பல நாடுகள் இவற்றில் அடக்கம்.

ரவீந்திர நாத் தாகூர்

இந்தியாவின் பிரபல கவிஞர் சுதந்திர போராட்ட வீரர். 14 நாடுகள் இவருடைய தபால் தலையை வெளியிட்டுள்ளன. இவற்றில் அர்ஜெண்டினா, பல்கேரியா, இலங்கை, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் அடக்கம், தாகூரின் 100-ஆவது பிறந்த நாள் அவருடைய அபிமானிகளால் கொண்டாடப்பட்ட போது, இந்திய தபால் இலாகா பல மதிப்புகளில் இவருடைய தபால் தலையை வெளியிட்டது.

அன்னை தெரஸா

50-க்கும் அதிகமான நாடுகள் அன்னை தெரஸாவின் தபால் தலையை வெளியிட்டுள்ளன. பிரேசில் ,பிரான்ஸ், வாட்டிகன் சிட்டி, மங்கோலியா உட்பட பல நாடுகள் இவற்றில் அடக்கம். இவை எல்லாவற்றிலுமே, அன்னை தெரஸாவை அவருடைய பாரம்பரிய உடையான , வெள்ளை வண்ண புடவையில், நீல கரையுடன் காணலாம்.

சுபின் மேத்தா

மேற்கத்திய இசையில் விற்பன்னர் மற்றும் கம்போசர். உலகம் முழுவதும் சுற்றி வந்து இவரும் சில நாட்டு தபால் தலைகளில் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரியா, மாலத்தீவு போன்றவை இதில் அடக்கம். பிரபலமான வியன்னா ஸ்டேட் ஒபாரா இவருடைய திறமையை அங்கீகரித்துத் தன்னுடைய அமைப்பில் உறுப்பினராக்கியுள்ளது. 

சச்சின் டெண்டுல்கர்

இவருடைய தபால் தலையை ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகள் வெளியிட்டுள்ளன. 2013-இல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து டெண்டுல்கர், நிரந்தரமாக ஓய்வு பெற்ற பின் இந்திய தபால் இலாகா இவருடைய தபால் தலையை வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT