தினமணி கொண்டாட்டம்

சென்னையில் "அண்ணாத்த'

24th Jan 2021 06:00 AM

ADVERTISEMENT

 

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் "அண்ணாத்த'. கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கரோனா பொது முடக்கம் காரணமாகக் கடந்த 9 மாதங்களாகப் படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது.

இதனிடையே கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி "அண்ணாத்த' படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கியது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்பட்டுப் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் 4 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். இந்நிலையில், ரஜினியின் "அண்ணாத்த' படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், ரஜினியின் உடல்நலனை கருத்தில் கொண்டு, எஞ்சியுள்ள படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை 75 சதவீத படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT