தினமணி கொண்டாட்டம்

தெரியுமா..? தெரியுமா..? தெரியுமா..?

17th Jan 2021 06:00 AM | -ராஜன்

ADVERTISEMENT

 

மனித உறவு... நியதிகள்

மனிதர்களுடன் இனிமையாகப் பேசுங்கள்
மனிதர்களிடம் புன்னகை காட்டுங்கள்
மனிதர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள்
மனிதர்களிடம் நட்புடன் உதவிகரமாகப் பழகுங்கள்
மனிதர்களிடம் மகிழ்வுடன் அணுகுங்கள்
மனிதர்களிடம் உண்மையான அன்பு காட்டுங்கள்
பாராட்டுவதில் தாராளமாய் இருங்கள்
மற்றவர்களின் உணர்வுகளை மதியுங்கள்
சேவை செய்யத் தயாராயிருங்கள்
நல்ல கலகலப்பான உணர்வுடன் இருங்கள்

 

எழுத்தராக இருந்து நீதிபதியாக உயர்ந்தவர்

மலையாள இலக்கிய, சமுதாய மறுமலர்ச்சி எழுத்தாளர் சந்துமேனன் 1847-1899. நீதித்துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்து நீதிபதியாக உயர்ந்தவர். சமூக வளர்ச்சிக்கு இலக்கியத்தின் மீது நம்பிக்கை கொண்டு "இந்துலேகா' என்ற முதல் மலையாள நாவலை எழுதினார். பழைய குடும்பத்துக்கும், புதிய குடும்பத்துக்கும் நிகழும் போராட்டத்தை நகைச்சுவை உணர்வுடன் கதையாக்கியுள்னார்.  இந்திய மறுமலர்ச்சிக்குக் கல்வி வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். இந்நாவலை 
எல்லோரும் விரும்பிப் படித்தனர். 


சித்தார்த்தரை புத்தராக்கிய ரோகிணி ஆறு

ADVERTISEMENT


உலகம் கடலால் சூழப்பட்டது. நாகரிகங்கள் ஆற்றங்கரைகளில் தோன்றின. தண்ணீர் மக்களுக்கு அடிப்படைத் தேவை. தண்ணீர் ஆற்றிலிருந்து பெறுவது நிரந்தரப் பிரச்னையாக இருக்கிறது. தண்ணீருக்கான போராட்டம் என்பது இன்று, நேற்று பிரச்னை இல்லை. அது 2500 ஆண்டுகளுக்கு மேலாக, கெளதம சித்தார்த்தர்

காலத்திலிருந்து வருகிறது. கெளதம சித்தார்த்தர் மகத நாட்டில் பிறந்தார். மகத நாட்டின் பக்கத்து நாடு கோசலம். இரண்டு நாட்டுக்குமிடையில் ரோகிணி ஆறு ஓடியது.  ரோகிணி ஆற்றின் நீரைச் சாக்கியர்களும், கோவிலியர்களும், குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். 

கோடை காலத்தில் நீர் வற்றியதால் இரு நாடுகளுக்குமிடையே உரிமை பிரச்னை ஏற்பட்டது. சாக்கிய சேனாதிபதி இளைஞர்களைப் போருக்குத் தயாராக சொல்லுகிறார். 

கெளதம சித்தார்த்தர் எழுந்து எல்லோரையும் சமாதானப்படுத்தினார். அதன் பின் அவர் பேசியது "நான் ரோகிணி ஆற்றின் தண்ணீருக்காகக் கோவிலியர்களோடு போரிடுவதை எதிர்க்கிறேன். போர் எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது. நாம் பெரும்பான்மையானவர்கள் என்பதாலும் போர் வேண்டாம்' என்றார். 

சாக்கியர்கள் இம்முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. முடிவை ஏற்கவில்லை என்றால் சித்தார்த்தரையும், குடும்பத்தையும் நாடு கடத்துவோம் என்றார் சாக்கிய சேனாதிபதி. அப்போது சித்தார்த்தர், "என் பொருட்டு குடும்பத்தினரை நாடு கடத்தி விடாதீர்கள். நானே என்னை நாடு கடத்திக் கொள்கிறேன். எந்த நிலையிலும் ரோகிணி ஆற்று  நீருக்காகப் போரிட மாட்டேன்' என்று சொல்லிவிட்டு அரண்மனை வாழ்வை, மனைவி மகன் தந்தையைத் துறந்து நாட்டைவிட்டுக் கானகம் சென்றார். 

கெளதம சித்தார்த்தனைப் புத்தனாக்கியது ரோகிணி ஆற்றுப்பிரச்னை தான் என்று அழுத்தமாக எழுதியுள்ளார் அம்பேத்கார். பழந் தமிழகத்துக்குச் சொந்தமான முல்லை ஆற்றின் நீருக்காகவும், காவிரி ஆற்றின் நீருக்காகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியும் நம் போராட்டம் இன்னும் முடியவில்லை. 
 -முனைவர் பெ.சுபாஷ் சந்திர போசுவின் "முகநூல் பதிவுகள்' 

 

உலகின் 8-ஆவது இயற்கை அதிசயம் 


உலகின் 8-ஆவது இயற்கை அதிசயம் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி  சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.

இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது. இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது ஆகும். 

இதனால் உலகின் 8-ஆவது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது. ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை. எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 -ஆவது அதிசயமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT