தினமணி கொண்டாட்டம்

விண்வெளியில் அதிசயம்

ஜெ


விண்வெளியில் விவசாயம் செய்ய முடியுமா? நாசா விண்வெளி வீரர்கள் இதைச் சாத்தியமாகியுள்ளனர். மைக்ரோ கிராவிட்டியில் (ஈர்ப்பு விசைக் கொஞ்சமே கொஞ்சம் இருக்கும் நிலை. இதை மைக்ரோ கிராவிட்டி என்றும் அழைப்பார்கள். விண்வெளி முழுக்க இந்த நிலைதான்)  முள்ளங்கி வளர்த்து சாதனை படைத்து இருக்கிறார்கள். 

இதற்கு முன்பு அதாவது 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை நடந்த ஆய்வில் விஞ்ஞானிகள் விண்வெளியில் ஒரு பெட்டி ஒன்றில் தாவரங்களை வளர்த்துள்ளனர். அந்த பெட்டியில் எல்இடி லைட்டிங் மற்றும் தண்ணீர் ஊற்றும் சிஸ்டம் செடியின் இலைகளை வளரச் செய்துள்ளது. 33 முதல் 56 நாள்கள் வளர்ந்த அந்த இலைகளை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உண்டனர்.
நாசாவின் விண்வெளி வீரர்கள் இப்போது விண்வெளியின் மைக்ரோ கிராவிட்டியில் முள்ளங்கிகளை வளர்த்து  அறுவடை செய்யவும் தயாராகிவிட்டனர். விண்வெளியில் வீரர்களே விவசாயம் செய்யவேண்டும் சந்திரன் அல்லது செவ்வாயில் அமைக்கும் காலனியின் முக்கிய உணவு தேவைகளை வீரர்களே விவசாயம் செய்து வளர்த்து நாகரிகத்தின் சாராம்சத்துடன் வாழ வேண்டும். இது புதிய உணவு, தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பூமியின் ஒற்றுமையையும் வேற்றுக்கிரகத்தில் உருவாக்க வேண்டும். 
இது வீரர்களுக்கு வீடு போன்ற மனநிலையை உருவாக்கி, அவர்களின் மன நிலையை ஆரோக்கியப்படுத்தும். இதனை கருத்தில் கொண்டு நாசா சோதனை மையம் மைக்ரோ-கிராவிட்டியில் வளரும் தாவரங்களைப் பற்றிய ஆய்வு செய்து வருகிறது.சர்வதேச விண்வெளி ஆய்வகத்திற்கு அவ்வப்போது உணவுப் பொருள்கள் அனுப்பப்படும். நாம் பூமியில் சாப்பிடுவது போலவே அங்கும் அதனை பிரஷ்ஷாக சாப்பிடுவார்கள். இந்நிலையில் அங்கு எப்படி உணவை விளைவித்து உண்ணுவது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
சிவப்பு மற்றும் நீல ஒளியில் தாவரம் வளர்ப்பு ஐரோப்பிய ஆராய்ச்சி மையங்களில் வளர்க்கப்படும் மைக்ரோ கிராவிட்டி தாவரங்கள், சிவப்பு மற்றும் நீல ஒளிக்கு சிறந்த முறையில் பதிலளிப்பதைக் காட்டியுள்ளது. விண்வெளியில் தாவரங்களுக்கு மண்ணில் வேர் விடும் ஈர்ப்பு இல்லை என்பதால், விதைகள் "தலையணைகளில்" வளர்க்கப்படுகின்றன, அவை உரங்களையும் நீரையும் வேர்களுக்குச் சமமாக விநியோகிக்க உதவுகின்றது என்று நாசா தெரிவித்துள்ளது. 
விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பதற்கு முடிவு செய்தபோது ஏன் முள்ளங்கிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற காரணத்தையும் நாசா விளக்கியுள்ளது. முள்ளங்கிகள் குறுகிய சாகுபடி காலத்தைக் கொண்டிருக்கின்றன மற்றும் மரபணு ரீதியாக விண்வெளியில் அடிக்கடி ஆய்வு செய்யப்படும் தாவரமான அரபிடோப்சிஸூடன் இவை ஒத்தவை. 
முள்ளங்கிகளும் உண்ணக்கூடியவை மற்றும் பல ஊட்டச்சத்துகளைக் கொண்ட சத்தான உணவாகும். விண்வெளியில் பயிரிடப்பட்ட இந்த  முள்ளங்கிகள் இப்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது என்றும், அறுவடை செய்யப்படும் முள்ளங்கி மாதிரிகள் ஆய்வுக்காகப் பூமிக்கு அனுப்பப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது. 
தீவிரமான கண்காணிப்பில் இப்படித் தான் வளர்க்கப்பட்டதாம் தாவரங்கள் எல்ஈடி விளக்குகள், நுண்ணிய களிமண், 
180 க்கும் மேற்பட்ட சென்சார்கள் மற்றும் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, நீர் மற்றும் உரங்களைச் சிறப்பாக விநியோகிக்கப்பட்டு, ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை அளவைக் கட்டுப்படுத்தி வளர்க்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT