தினமணி கொண்டாட்டம்

ஓடிடியில் நுங்கம்பாக்கம்

25th Oct 2020 04:59 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கு சம்பவத்தை மையமாக வைத்து ரமேஷ் செல்வன் எழுதி இயக்கி இருக்கும் படம் "நுங்கம்பாக்கம்.'  இப்படத்தின் முதல் கட்டப் பணியில் இருந்து வெளியீடு வரை பல சர்ச்சைகள்.  வெளியீட்டு தேதியை பலமுறை அறிவித்தும் வெளிவர முடியாத சூழலில் இருந்த இந்தப் படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  இப்படத்துக்கு தற்போது பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.  இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசும் போது.... 

""சினிமாக்காரனுக்கு கிளிசரின் போடாமல் கண்ணீர் வழிகிற நிமிடங்கள் இருக்கே... அது ரொம்பவே துயரமானது. ஏனென்றால் அது உண்மையான கண்ணீரா... இல்லை வெறுமென நடிப்பா... என்கிற சந்தேகம் ஒரு விநாடி எல்லாருடைய மனதிலும் எட்டிப் பார்த்து விட்டுப் போகும்.  இரண்டு வருட போராட்டத்துக்கு மேலாக இப்படம் இப்போது வெளிவந்துள்ளது.   கருத்துள்ள படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம்.  தற்போது சினிபிளிக்ஸ் என்ற ஓடிடியில் படம்  வெளிவந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT