தினமணி கொண்டாட்டம்

வாழ்க்கைப் படம்

18th Oct 2020 06:00 AM

ADVERTISEMENT

 

தனி மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்  வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கைப் பரப்புரை எனப் பல வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. இந்த வகையில் மோடி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர். என அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படங்கள் உருவாகி வருகின்றன. ஒரு சில படங்கள் திரைக்கும் வந்து விட்டன.  

இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுக்க வந்து கொண்டிருக்கின்றன. "கப்பலோட்டிய தமிழன்', "வீரபாண்டிய கட்டபொம்மன்', "ராஜராஜசோழன்' என தமிழ் வரலாற்று அடையாளங்களாகத் திகழ்ந்தவர்களின் படங்கள் மட்டுமே ஒரு காலத்தில் வெளியாகி வந்தன. 

"நடிகையர் திலகம் (மகாநடி)', "செல்லுலாய்ட்', "பேட்மேன்', "ராமானுஜன்' என ஏதோவொரு துறையின் சாதனையாளர்களைப் பற்றி ஒருபுறம் வந்துகொண்டிருந்தாலும், "சஞ்சு', "ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்', "என்.டி.ஆர்' என உள்நோக்கத்துடன் எடுக்கப்படும் வாழ்க்கை வரலாற்றுப் படங்களும் திரைக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த வரிசையில் தமிழில் தற்போது உருவாகி வரும் படம் "தேசியத் தலைவர்'. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பசும்பொன் தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.  இஸ்லாமியரான இவர் இந்தப் படத்திற்காக 48 நாட்கள் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை  அரவிந்தராஜ் இயக்குகிறார்.  பசும்பொன் தேவருடன் மிக நெருக்கம் கொண்டிருந்த  நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன்  கண்ணன் இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் இணைந்துள்ளார். 

ADVERTISEMENT

Tags : தினமணி கொண்டாட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT